tg travels

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் மக்கள் மேல் உங்களுக்கு கருணை இல்லையா CEB ?



அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மின் பாவனையாளர்கள் பல அசெளகரியங் களை எதிர் கொண்டு வருகின்றனர்.

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் பகல் வேளையிலும் மற்றும் இரவு வேளைகளிலும் எவ்வித அறிவித்
தலும் இன்றி திடீர் திடீரென மின் சாரம் தடைப்படுவதால் மின்சார பாவனைப் பொருட்கள் பாதிக்கப்ப டுவதாக பொது மக்கள் சுட்டிக்காட் டுகின்றனர்.

மின் தடை காரணமாக மாணவர்களின் கல்விக்கு தடங்கள் ஏற்படுவதாகவும், இம்முறை கா.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பல அசெள கரியங்களை எதிர்கொள்வதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் மக்கள் மேல் உங்களுக்கு கருணை இல்லையா CEB ? அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் மக்கள் மேல் உங்களுக்கு கருணை இல்லையா CEB ? Reviewed by Madawala News on 7/29/2017 11:59:00 AM Rating: 5