Ad Space avaiable

உமாஓயா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை தான் முதலில் முற்றுகையிட வேண்டும்.


ரஜரட்ட மக்கள் பயன்படுத்தி வந்த நீரைத் தான் மஹிந்த ராஜபக்ஷ மெதமுலனைக்கு கொண்டுச்செல்ல உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்தார். இத்திட்டத்தின் வாயிலாக மின்சார உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என, மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று (8) தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உமாஓயா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை தான் முதலில் முற்றுகையிட வேண்டும்.

இந்த உமா ஓயா திட்டத்துக்கு மொத்தமாக 150 மில்லியன் ரூபாய் மாத்திரமே ​தேவையாகும்.

ஆனால் 500 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தமைக்கு மஹிந்த ராஜபக்ஷ தான் பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
உமாஓயா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை தான் முதலில் முற்றுகையிட வேண்டும். உமாஓயா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை தான் முதலில் முற்றுகையிட வேண்டும். Reviewed by Madawala News on 7/09/2017 11:15:00 AM Rating: 5