Ad Space avaiable

இந்தியப் படையை வெளியேறக் கோரி சீன ராணுவம் கடும் போர்ப் பயிற்சி.

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

சிக்கிம் எல்லையில் இந்தியா, பூடான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் முச்சந்திப்புக்கு அருகே பீடபூமி என்ற பகுதி உள்ளது. இதை 'டோகா-லா' என இந்தியாவும், 'டோகாலாம்' என பூடானும், 'டோங்லாங்' என சீனாவும் அழைத்து வருகின்றன. இந்தப் பகுதியை சீனா தற்போது தன்னுடைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்று கூறிவரும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, அங்கு வீதி அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. 

ஆனால், சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்கும் என்ற நோக்கில் இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக, வடகிழக்கு பிராந்தியங்களை இந்தியாவுடன் இணைக்கும், ‘கோழிக்கழுத்து’ என அழைக்கப்படும் மெல்லிய நிலப்பரப்பை, இந்தச் வீதி மூலம் சீனா ஆக்கிரமிக்கும் நிலை ஏற்பட்டுவிடலாம் என்பதால் இந்தியா இப்பகுதியில் வீதி
கள் அமைக்கும் பணிகளுக்கு முட்டுக்கட்டைபோட்டது. மேலும், வீதி
கள் அமைக்கும் சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். எனவே, இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டது. சிக்கிம் எல்லைக்குள் இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குக் குழிகளையும் சீனா அழித்தது. இதனால், சிக்கிம் எல்லையில் சுமார் 3ஆயிரம் ராணுவ வீரர்களை இந்தியா குவித்துள்ளது. இதனால் சீனாவும் அந்தப் பகுதியில் தனது படைகளைக் குவித்துவருகிறது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இதை வலுப்படுத்தும் விதமாக இந்தியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக சீனா தொடர்ந்து மிரட்டிவருகிறது. 

இதைத்தொடர்ந்து சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் தாக்குதல் பயிற்சி மற்றும் தற்காப்பு பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இலகு ரக பீரங்கி உள்ளிட்ட பல படைக்கருவிகளையும் அப்பகுதியில் சோதித்துப் பார்த்து வருகிறது. 5,100 மீட்டர் உயரமான பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் போர் ஒருங்கிணைப்பு போன்ற பல பயிற்சிகளும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய செய்திகள் மற்றும் தகவல்களை சீன அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், சிக்கிம் எல்லையிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று சீனா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சுயாங்க் கூறுகையில், "சிக்கிம் பகுதியில் இந்தியப் படை இருப்பதால்தான் அச்சுறுத்தல் நிலவுகிறது. அமைதியான சூழல் உருவாவதற்காக இந்தியப் படை திரும்பிச் செல்லவேண்டும். சீனா தனது பகுதிக்குள் சாலைகள் அமைத்துக்கொள்ள முழு உரிமை உண்டு. சிக்கிம் எல்லையில் இந்தியாவின் படை குவிப்பே அங்கு பதற்றம் நீடிப்பதற்குக் காரணம். எனவே அங்கு கடுமையான விளைவுகளை உருவாக்கும் தீவிரமான சூழல்களை தடுப்பதற்காக இந்தியா தனது படைகளைத் திரும்பப்பெற வேண்டும். இந்தப் பணிகளால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எப்படி ஏற்படும். சாலைப் பணிகளை மையமாக வைத்து இந்திய எல்லைக்குள் நுழைவது அபத்தமானது. மேலும், சில பகுதிகளில் முகாம்களை நிறுவியுள்ளது இந்திய ராணுவம். இந்தச் சாலைப் பணிகள் மேற்கொள்ளும்போது சீனாவின் பாதுகாப்பைப் பற்றி இந்தியா கவலை கொண்டதா என்று தெரியவில்லை" என கூறியுள்ளார்

இந்தியப் படையை வெளியேறக் கோரி சீன ராணுவம் கடும் போர்ப் பயிற்சி. இந்தியப் படையை வெளியேறக் கோரி சீன ராணுவம் கடும் போர்ப் பயிற்சி. Reviewed by Madawala News on 7/07/2017 04:47:00 PM Rating: 5