tg travels

சினிமா வன்புணர்வு காட்சியை பதிவிட்டு மத (முஸ்லிம்) மோதலை தூண்ட முயன்ற பாஜக தலைவர்.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

திரைப்படத்தில் தோன்றும் ஒரு வன்புணர்வு காட்சியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு மத மோதலை தூண்ட முயன்ற பாஜக தலைவரை கைது செய்ய வேண்டி கோரிக்கை எழுந்துள்ளது.

ஹரியானாவை சேர்ந்த பாஜக தலைவர் விஜேத்தா மாலிக் என்பவர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படத்தை போட்டுள்ளார் அதில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் படுவதாகவும் அதனை சுற்றியுள்ளவர்கள் வக்கிர புத்தியுடன் வேடிக்கை பார்ப்பதாகவும் உள்ளது.

அந்த பதிவின் கீழ் இது மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவம் என்றும்,  இந்து பெண்களுக்கு மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் முஸ்லிம்களால் அவர்கள் வன்புணர்வு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த பதிவு வைரலாக பரவியது. பல ஆயிரம் லைக்குகளும், பகிர்வுகளும் அந்த பதிவுக்கு கிடைத்தது. மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப் பட்டது.

இதனை ஆராய்ந்த போலீஸ், அது ஒரு பேஜ்பூரி திரைப்படமான ‘Aurat Khilona Nahi’ என்ற படத்தில் உள்ள காட்சி என்பதை உறுதி செய்தது. மேலும் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் இரு பிரிவினரிடையே வன்முறை ஏற்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் இந்த பதிவு மீண்டும் ஒரு மத மோதலை உறுவாக்கும் செயல் என்று எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் விஜேத்தா மாலிக்கை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனவே மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பாஜகவே காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தகக்து.
சினிமா வன்புணர்வு காட்சியை பதிவிட்டு மத (முஸ்லிம்) மோதலை தூண்ட முயன்ற பாஜக தலைவர். சினிமா வன்புணர்வு காட்சியை பதிவிட்டு மத (முஸ்லிம்)  மோதலை தூண்ட முயன்ற பாஜக தலைவர். Reviewed by Madawala News on 7/08/2017 08:07:00 PM Rating: 5