Kidny

Kidny

அமெரிக்கா உருவாக்கிய இஸ்லாமிய சர்வதேசியம்.


-Muja ashraff -

“இஸ்லாம் என்பது வெறும் மதமல்ல, அது ஒரு சமூக அரசியல் தத்துவம். அத்தகைய புனிதமான இசுலாத்தின் மீது நாத்திகர்களான ரசியர்கள் போர் தொடுத்திருக்கிறார்கள்”  என்பதே சி.ஐ.ஏ நடத்திய பிரச்சாரத்தின் மையக் கருத்து. எனவே ஆப்கான் போராட்டம் என்பது “கம்யூனிஸ்டுகளுக்கெதிரான இசுலாமிய சர்வதேசியத்தின் புனிதப் போர்” (Pan Islamic Jahad)  ஆகிவிட்டது.

இன்று அமெரிக்கத் தாக்குதலை “இசுலாத்திற்கெதிரான போர் ” என்று தாலிபானும் பின்லாடனும் கூறியவுடனே “நாங்கள் பயங்கரவாதத்தை தான் எதிர்க்கிறோம் இசுலாமை அல்ல” என்று டோனி பிளேரும் புஷ்ஷும் ஊர் ஊரகச் சென்று கதறுகிறார்கள்.

ரசியா என்ற சொல் இருந்த இடத்தில் அமெரிக்கா என்ற சொல்லை பின்லாடன் பயன்படுத்துகிறாரே தவிர, மற்றபடி இந்த வசனத்துக்குரிய “அறிவுச் சொத்துடைமை”  அமெரிக்காவையே சாரும். 1980 களில் ரேடியோ லிபர்டி, ரேடியோ ஃப்ரீ யூரோ ஆகிய வானொலிகள் ரசியாவின் மத்திய ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகளுக்கான ஒலிபரப்பில் இசுலாமிய சர்வதேசியத்தை தான் பிரச்சாரம் செய்தன.

ரசியாவுடனான பனிப்போரில் இசுலாமிய நாடுகளை தன் பக்கம் இழுக்கவும், மத்திய ஆசிய நாடுகளில் இசுலாமிய மதவெறியை உருவாக்கவும், சி.ஐ.ஏ பயன்படுத்திய சித்தாந்த ஆயுதம் தான் இசுலாமிய சர்வதேசியம்.

வெறும் கருத்துப் பிரச்சாரத்துடன் இது நிற்கவில்லை. 1982  – இலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில், 40 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் முசுலீம் இளைஞர்கள் பாகிஸ்தானின் மதராஸாக்களில் இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டனர். சித்தாந்த பயிற்சி மட்டுமின்றி ஆயுதப் பயிற்சியையும் வழங்கியது அமெரிக்கா.
அமெரிக்கா உருவாக்கிய இஸ்லாமிய சர்வதேசியம். அமெரிக்கா உருவாக்கிய இஸ்லாமிய சர்வதேசியம். Reviewed by Madawala News on 7/14/2017 09:45:00 AM Rating: 5