Ad Space avaiable

தாஜுதீன் கேஸ் ! ஹிரந்தி மற்றும் யோஷிதவுக்கு CID அழைப்பானை ..


வசீம் தாஜுதீன் கொலை விவகார விசாரணைக்கு சமூகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி மற்றும் அவரது புதல்வர் யோசித்தவுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.


இதனடிப்படையில் நாளை ஷிரந்தி விசாரணைக்குட்படுத்தப்படுவதோடு அதற்கு மறுநாள் யோசித்த விசாரிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதே நேரம் நாளைய விசாரணைக்கு ஷிரந்தி சமூகமளிக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாதாக குறித்த கொலையுடன் யோஷித தொடர்பு பட்டுள்ளதாக ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கூறிவந்த நிலையில் அதனை தொடர்ந்து நாமல் ஷிரந்தி ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டன.

ஏற்கனவே தாஜுதீனின் உடல் பாகங்கள் தொலைந்து விட்டதாக சீ சீ டி வி காட்சிகள் தெளிவில்லை என பலதரப்பட்ட நேர் எதிரான தகவல்கள் வெளியாகியிருந்தது.

உள்ளூராட்சித் தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மீண்டும் அரசியல் களம் சூடு பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தாஜுதீன் கேஸ் ! ஹிரந்தி மற்றும் யோஷிதவுக்கு CID அழைப்பானை .. தாஜுதீன் கேஸ் ! ஹிரந்தி மற்றும் யோஷிதவுக்கு CID அழைப்பானை .. Reviewed by Madawala News on 7/26/2017 08:30:00 PM Rating: 5