Kidny

Kidny

இனத்துவேஷ அடிப்படையில் அபிவிருத்திகளை மேற்கொள்வது எமது அகராதியிலும் இல்லை.



கிழக்கு மாகாண சபை இனத்துவேஷ அடிப்படையில் அபிவிருத்திகளை மேற்கொள்கின்றது என்று எவராவது கூறுவார்களாயின் ஒன்றில் அவர்களுக்கு குறுகிய மனப்பான்மை இருக்க வேண்டும் அன்றேல் புத்திசவாதீனமற்றவர்களாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாடசாலைக்கு தளவாடங்கள் விநியோகிக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

இதன்போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 23 பாடசாலைகளுக்கு தளவாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

எமக்கு முன்னாலுள்ள பல வேலைப்பளுக்களின் காரணமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திச் செயற்பாடுகளிலேயே என்னால் கலந்து கொள்ள முடிகிறது.

வேலைப்பளு மற்றும் நேரமின்மை காரணமாக எனக்கு எல்லாப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளில் பங்கேற்கக் கிடைப்பதில்லை,

இதனை வைத்துக் கொண்டு நான் கலந்து கொள்ளும் பகுதிகளில் மாத்திரமே மாகாண சபையால் அபிவிருத்திப் பணிகளில் முன்னெடுக்கப்படுவதாக சில குறைமதி அரசியல்வாதிகள் உட்பட சிலர் பேசிக் கொள்கின்றனர்.

இது அவர்களது அரசியல் இலாபம் கருதி இத்தகைய தவறான தோற்றப்பாட்டையும் பொது மக்கள் மத்தியில் இன, பிரதேச வேறுபாட்டையும்  உருவாக்க சிலர் முயற்சிக்கின்றார்கள்.

ஆனால் நாம் கிழக்கின் மூவினங்கள் வாழும் எல்லா மாவட்டங்களிலும், எல்லா ஊர்களிலும் எல்லாக் கிராமங்களிலும்  சமமான அபிவிருத்திகளையே முன்னெடுக்கின்றோம்,

நாம் ஒரு பகுதிக்கு மாத்திரம் தான் அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம் என்று நிரூபிக்க கூடிய உரிய ஆவணங்களோ, புள்ளி விவரங்களோ இல்லாமல் அறிவீனர்களாக அவர்கள் உளறுகின்றனர்.

நாம் சகல பகுதிகளுக்கும் சமமான அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம் என்பதற்கான சகல ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன, ஆகவே நாம் இன மத மொழி பிரதேச அரசியல் ஆதரவு வேறுபாடுகளின்றி சகல பகுதிகளுக்குமான அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றோம்,

நாம் முன்னெடுக்கும்  அபிவிருத்திப் பணிகள் உரிய அரச பொறிமுறையின் ஊடாக அவற்றுக்கான கோரிக்கைக் கடிதங்களை தயார்படுத்தி, அது தொடர்பான திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து அதன் மூலம் மக்கள் அடையப் போகும் நன்மைகளை அடையாளப்படுத்தி சகல தரவுகளையும் உள்ளடக்கி இந்த மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கின்றோம்.

அத்துடன் அனைத்து இனங்கள் மற்றும் சமூகங்களுக்குமான நிதிகள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம்.-என்றார்.

-அப்துல் கையூம்-
இனத்துவேஷ அடிப்படையில் அபிவிருத்திகளை மேற்கொள்வது எமது அகராதியிலும் இல்லை. இனத்துவேஷ அடிப்படையில் அபிவிருத்திகளை மேற்கொள்வது எமது அகராதியிலும் இல்லை. Reviewed by Madawala News on 7/28/2017 08:30:00 AM Rating: 5