Ad Space avaiable

ஊருக்குள் நுழைந்த அழையா விருந்தாளி பிடிபட்டார். இது கதுருவெல-முஸ்லிம் கொலனியில்.


-ஆரிப் எஸ்.நளீம்-

அழையா விருந்தாளியாக ஊருக்குள் நுழைந்த முதலையொன்றை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மடக்கிப்பிடித்த சம்பவமொன்று நேற்று 29.07.2017ம் திகதி சனிக்கிழமை கதுருவெல-முஸ்லிம் கொலனிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கதுருவெல-முஸ்லிம் கொலனி பட்டதுன ஆற்றிலிருந்தே ஊருக்குள் குறித்த முதலை நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதே வேளை, சன நடமாட்டமில்லாத இரவு வேளைகளில் ஊருக்குள் புகுந்து ஆடு, கோழி போன்றவற்றை வேட்டையாடி வந்த நிலையில், அதே நோக்கோடு காலை வேளையில் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஊர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட முதலை வன இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சரணாலயத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கடந்த சில காலங்களுக்கு முன்னர் குறித்த ஆற்றில் காணப்பட்ட முதலைகள் வியாபார நோக்கங்களுக்குப் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தொடர்பில் அம்முதலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நாம் ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊருக்குள் நுழைந்த அழையா விருந்தாளி பிடிபட்டார். இது கதுருவெல-முஸ்லிம் கொலனியில். ஊருக்குள் நுழைந்த அழையா விருந்தாளி பிடிபட்டார். இது கதுருவெல-முஸ்லிம் கொலனியில். Reviewed by Madawala News on 7/30/2017 08:56:00 AM Rating: 5