Ad Space avaiable

மஹிந்த ராஜபகஷவின் உத்தரவொன்றில் சுவீகரிக்கப்பட்ட வெள்ளவத்தை மூன்று மாடிக் கட்டட விவகாரம். நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு இதுதான்.



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவின் உத்தரவொன்றின் பேரில் வெள்ளவத்தைப் பகுதியில் வசித்து வந்த இருவரின் வசிப்பிடம் சுவீக ரிக்கப்பட்டதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட் டுள்ளதாக உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர் புவனேக அலுவிகார மற்றும் நீதியரசர் அனில் குணரத்ன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிய ரசர்களைக் கொண்ட குழு குறித்த வசிப்பிடதாரிகளுக்கு 500,000 ரூபா
நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டு மெனவும் கட்டடத்தை குறித்த தம் பதியினரிடம் இரண்டு மாத காலப்பகுதிக்குள் திருப்பி ஒப்படைக்குமாறும் உத் தரவிட்டுள்ளது.


வெள்ளவத்தை சப்பெல் ஒழுங்கையில் அமைந் துள்ள தங்களின் மூன்று மாடிக் கட்டடம் ஆரம்பத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் பொறுப்பேற் கப்பட்டதாகவும் அதன் பின்னர் அரசாங்கத்தினால் அது சுவீகரிக்கப் பட்டதாகவும் மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.


மேற்படி வசிப்பிட உரிமையாளர் களான சண்முகம் சிவராஜா மற்றும் அவது மனைவியான சிவராஜா சரோஜினி ஆகிய இருவரும் தங்கள் வசிப்பிடம் சுவீகரிக்கப்பட்டதன் மூலம் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பை வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத் தில் மனுவொன்றை தாக்கல் செய்தி ருந்தனர்.


அனைத்துப் பிரஜைகளுக்கும் சமனான சட்டப் பாதுகாப்பை உத்த ரவாதப்படுத்தும் அரசியலமைப்பின் 12 (1) ஆம் இலக்க ஷரத்து அரசின் நடவடிக்கைகளினால் மீறப்பட்டுள் ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க, முன்னாள் பாது காப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப் பட்டிருந்தனர்.


சொல்லப்பட்ட கட்டடத்தை அரசு டமையாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட 2009 டிசம்பர் 17 ஆம் திகதியிடப்பட்ட அரச வர்த்த மானி சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபகஷவின் உத்தரவொன்றில் சுவீகரிக்கப்பட்ட வெள்ளவத்தை மூன்று மாடிக் கட்டட விவகாரம். நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு இதுதான். மஹிந்த ராஜபகஷவின் உத்தரவொன்றில் சுவீகரிக்கப்பட்ட வெள்ளவத்தை மூன்று மாடிக் கட்டட விவகாரம். நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு இதுதான். Reviewed by Madawala News on 7/28/2017 10:10:00 AM Rating: 5