Kidny

Kidny

கண்டி தலதா மாளிகை முன் சாகும் வரை உண்ணா விரதம் .


( மொஹொமட் ஆஸிக்) ​

நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படும்  கருத்து ஒன்றிற்கு  எதிர்ப்பு தெரிவித்து  இளைஞன் ஒருவன் இன்று பகல்  முதல் கண்டி  ஶ்ரீ  தலதா மாளிகை்கு முன்  வாவிக் கறையில  சாகும்  வரை உண்ணா விரத  போராட்டம் ஒன்றை  மேற்கொண்டுள்ளார்.

வரக்காபொலையை சேர்ந்த நாமல்  குமார  என்ற  இளைஞன் இவ்வாரு  உண்ணா விரத  போராட்டத்தை  மேற்்கொண்டுள்ளார்.

போயா தினத்தன்று மதுமானம் விற்பனை செயவது தொடர்பாகவும்,  பியர்அருந்துவது  தொடர்பாகவும்  புதிதான மதுபான  சாலைகள் ஆரம்பிப்பது  தொடர்பாகவும்  அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ள கரத்தை அரசு நிராகரிப்பதாக ஜனாதிபதி  அறிவிக்கும் வரை இவ் உண்ணா விரத  போராட்டத்தை கைவிட போவதில்லை என்று  அவ் இளைஞன் கூறுகின்றார்.
இவர்சில் சுலோகங்களை கையேந்தியவாரு இவ்  உண்ணாவிரத  போராட்டத்தில்  ஈடு பட்டுள்ளார்.

2017 07 02  ஆஸிக்
கண்டி தலதா மாளிகை முன் சாகும் வரை உண்ணா விரதம் . கண்டி  தலதா மாளிகை முன்  சாகும் வரை  உண்ணா விரதம் . Reviewed by Madawala News on 7/02/2017 10:10:00 PM Rating: 5