Ad Space avaiable

மஹிந்த அரசின் கடன்களை மீளச் செலுத்த 2O19 இல் ரூ. 3.2 ட்ரில்லியன் தேவை.


மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்த 2019ஆம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுவதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமர வீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளி நாட்டுச் செலாவணி சட் டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே அமைச் சர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவி யேற்ற பின்னர் பல்வேறு குப்பை மேடுகளைத் தனது தோள்களில் சுமக்கவேண்டி ஏற்பட்டது. சர்வதேச அரங்கிலிருந்து மனித உரிமைப் பிரச் சினை, பாரிய கடன்கமை, ஊழல் மோசடி, குப்பைப் பிரச்சினை என பல்வேறு குப்பைமேடுகளை சுமக்க வேண்டி ஏற்பட்டது.


கடந்த ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற மோசடிகள் தொடர்பில் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற குற்றச் சாட்டு காணப்படுகிறது. 

எனினும், ராஜபக்ஷ குடும்பத்தில் வீடு வாங்கியமை, கறுப்புப் பணப் புழக்கமென 3.1 பில்லியன் ரூபா பெறுமதியான மோசடி குறித்த தகவல்கள் நீதிமன் றத்துக்கு வழங்கப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

 எனினும் வெளிநாட்டில் மறைத்துவக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்களைப் பெற முடியாதுள்ளது.

நாட்டின் கடன்சுமைகளுக்காக இந்த வருடத்தில் அரசாங்கம் 2085 மில்லியன் டொலர்களைச் செலுத்தியுள்ளது. 

இதில் 72 வீதம் கடந்த அர சாங்கத்தின் காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கான கொடுப்பனவாகும். 2019ஆம் ஆண்டாகும்போது வருடத் துக்கான கடன் மீள் கொடுப்பனவுக் காக 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்ப டுகிறது. இதில் 82 வீதமானது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்டதாகும். 

இது வருமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமானதாகும்.
2020ஆம் ஆண்டாகும் போது 3752 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தவேண்டியிருக்கும். 


2022ஆம் ஆண்டு தலையைத் தூக்க முடியதாள வுக்கு கடன்பெறப்பட்டுள்ளது. சும னதாச சொன்னமைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனா திபதி தேர்தலை முற்கூட்டியே நடத் தினார். 

ஜனாதிபதித் தேர்தலில் வெற் றிபெற்றால் ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்படுத்துவதும், சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகளைக் கொண்டு வரும்போது நாட்டு மக்களை ஒடுக்கி அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்ப தென்றும் மஹிந்த திட்டமிட்டிருந் தார்.


எனினும், ஆட்சிமாற்றம் ஏற்படுத் தப்பட்டு நாடு பொருளாதார நிலை மையில் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. சர்வ தேசநாணய நிதியம் எமது நிதிநிலை மைகளின் பலத்தை அறிந்து உதவி வருகிறது என்றார்.
இவ்வாறான நிலையிலேயே வெளிநாட்டுச் செலாவணியை தாரா ளமயப்படுத்தும் வகையிலான சட் டத்தை அரசாங்கம் கொண்டுவந்துள் ளது. இதனூடாக வெளிளிநாட்டு மூலதன முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர முடியும். இச்சட்டத் தின் மூலம் வரி ஏய்ப்புக்கள் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றத்தை கட் டுப்படுத்த முடியும் என எதிர்பார்க் கின்றோம்.

மஹிந்த அரசின் கடன்களை மீளச் செலுத்த 2O19 இல் ரூ. 3.2 ட்ரில்லியன் தேவை. மஹிந்த அரசின் கடன்களை மீளச் செலுத்த 2O19 இல் ரூ. 3.2 ட்ரில்லியன் தேவை. Reviewed by Madawala News on 7/26/2017 10:31:00 AM Rating: 5