Kidny

Kidny

விஷேட அதிரடிப்படையின் சத்த வெடிக்குப் பயந்து‪ஆற்றில் குதித்த சகோதரரில் ஒருவர் நீரில் மூழ்கிப் பலி! #மட்டக்களப்பு - கரடியனாறு


மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தன்குமாரவெளி ஆற்றில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த வேளை விஷேட அதிரடிப்படையினர் விரட்டி சத்தவெடி வைத்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஆற்றில் குதித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை (24.07.2017) பிற்பகல்இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொம்மாதுறை 10ஆம் கட்டை வீதியைச் சேர்ந்த சதாகரன் மதுஷன் (வயது 17) என்ற இளைஞன் உயிழந்ததுடன், அவரது சகோதரன் சதாகரன் கிஷாந்தன் (வயது 18) வைத்தியசாலையில் சிகிச்;சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முந்தன்குமாரவெளி ஆற்றிலிலிருந்து உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு வந்த விஷேட அதிரடிப்படையினர் மணல் ஏற்றியவர்களை விரட்டி வானத்தை நோக்கி சத்தத் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதனால் அங்கு மணல் அகழ்ந்துகொண்டிருந்தவர்கள் 
குறித்த சகோதரர்கள் இருவரும் ஆற்றில் குதித்து தப்பியோட முயற்சித்த வேளை, ஆற்றின் நீர் மட்டம் அதிகம் காணப்பட்டதால் நீரில் மூழ்கியுள்ளனர்.

அதையடுத்து அருகில் இருந்தவர்களினால் மீட்கப்பட்டு, செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 
வைத்தியசாலைக்கு கொண்டுவருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே சதாகரன் மதுஷன் உயிழந்துள்ளதாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் ரீ. பரமானந்தராஜா தெரிவித்தார். 

மற்றையவர் அதிர்ச்சியில் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர் மேலும்  கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.  
விஷேட அதிரடிப்படையின் சத்த வெடிக்குப் பயந்து‪ஆற்றில் குதித்த சகோதரரில் ஒருவர் நீரில் மூழ்கிப் பலி! #மட்டக்களப்பு - கரடியனாறு விஷேட அதிரடிப்படையின் சத்த வெடிக்குப் பயந்து‪ஆற்றில் குதித்த சகோதரரில் ஒருவர் நீரில் மூழ்கிப் பலி! #மட்டக்களப்பு - கரடியனாறு Reviewed by Madawala News on 7/24/2017 04:20:00 PM Rating: 5