tg travels

சத்திர சிகிச்சை முதுமானிப் பட்டப் பின் படிப்பு.... தெரிவான 27வைத்தியர்களுள் ஒரே முஸ்லிம் வைத்தியராக நிந்தவூர் Dr. அன்ஜாஸ் தெரிவு.



கொழும்பு பல்கலைக் கழகத்தின் வைத்தியத் துறைக்கான பட்டப் பின்படிப்பு நிறுவகம் இவ்வாண்டு
நடத்திய சத்திர சிகிச்சை முதுமானிப் பட்டப் பின்படிப்பை பயிலும் அனுமதிக்காகத் தோற்றிய 160 வைத்தியர்களில் 27 வைத்திய அதிகாரிகளே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன.

தெரிவு செய்யப்பட்டுள்ள 27வைத்தியர்களுள் 19சிங்களவர்களும், 07தமிழர்களும் மற்றும் ஒரு முஸ்லிம் வைத்தியரும் அடங்குவர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் வைத்திய அதிகாரி நிந்தவூர் 12ம் பிரிவைச் சேர்ந்த மீராசாஹிப் அன்ஜாஸ் (Anjas) அவர்களாவார்.

வைத்திய அதிகாரி எம். அன்ஜாஸ், தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் எலும்புமுறிவு சத்திர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுகிறார்.

மூன்றுவருட கால சத்திரசிகிச்சை முதுமானிப் பட்டப் பின்படிப்பை பூர்த்தி செய்ததன் பின்னர் Dr. அன்ஜாஸ் அவர்கள் ஒரு சத்திர சிகிச்சை நிபுணராக வெளியேறுவார்.

இதன் பிரகாரம் இவர் நிந்தவூரின் இரண்டாவது சத்திர சிகிச்சை நிபுணர் என்னும் பெருமையைப் பெறுவார்.

ஏற்கெனவே இவரது குடும்பத்தில் Dr. றசீன் ஆதம் அவர்கள் நிந்தவூரின் முதலாவது சத்திர சிகிச்சை நிபுணராகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Dr. அன்ஜாஸ் அவர்கள் நிந்தவூர் அல் மதீனா வித்தியாலயம், கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்முனை சாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.

 -A Safath ahamed-
சத்திர சிகிச்சை முதுமானிப் பட்டப் பின் படிப்பு.... தெரிவான 27வைத்தியர்களுள் ஒரே முஸ்லிம் வைத்தியராக நிந்தவூர் Dr. அன்ஜாஸ் தெரிவு. சத்திர சிகிச்சை முதுமானிப் பட்டப் பின் படிப்பு.... தெரிவான  27வைத்தியர்களுள் ஒரே முஸ்லிம் வைத்தியராக நிந்தவூர் Dr. அன்ஜாஸ் தெரிவு. Reviewed by Madawala News on 7/31/2017 06:39:00 AM Rating: 5