Ad Space avaiable

பல்கலைக்கழக மாணவர்கள் கைகலப்பு... சிலர் வைத்தியசாலையில்... பிரித் நிகழ்வில் இடையில் இந்த மோதல்.


ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் மற்றும் மேலும் சில மாணவர்களுக்கு இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த 3 மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பிரித் நிகழ்வில் இடையில் இந்த மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

(படம் : அடையாளப்படம் )
பல்கலைக்கழக மாணவர்கள் கைகலப்பு... சிலர் வைத்தியசாலையில்... பிரித் நிகழ்வில் இடையில் இந்த மோதல். பல்கலைக்கழக மாணவர்கள் கைகலப்பு... சிலர் வைத்தியசாலையில்... பிரித் நிகழ்வில் இடையில் இந்த மோதல். Reviewed by Madawala News on 7/01/2017 12:16:00 PM Rating: 5