Kidny

Kidny

ஆகஸ்ட் முதலாம் திகதி வரை பணி பகிஷ்கரிப்பு இல்லை. சற்று முன்னர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய எரிபொருள் தொழிற்சங்கம் அறிவிப்பு.


பல்வேறு கோரிக்கைகளமைுன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.

இதன்காரணமாக எரிபொருள் கேள்வியில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்ததுடன், பொது மக்களும் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

வேலை நிறுத்தம் காரணமாக முடங்கிக் கிடந்த எரிபொருள் விநியோக நடவடிக்கை தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கொலன்னாவ எரிபொருள் நிலையம் கூறியுள்ளது.

இந்நிலையில்  கனிய எண்ணெய் தொழிற்சங்கம்,  ஜனாதிபதியுடன் சற்றுமுன்னர் பேச்சுவார்த்தை ஒன்றை தடத்தியது.
இதனை அடுத்து,  ஆகஸ்ட் முதலாம் திகதி வரை பணி பகிஷ்கரிப்பு இல்லை என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் முதலாம் திகதி வரை பணி பகிஷ்கரிப்பு இல்லை. சற்று முன்னர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய எரிபொருள் தொழிற்சங்கம் அறிவிப்பு. ஆகஸ்ட் முதலாம் திகதி வரை பணி பகிஷ்கரிப்பு இல்லை. சற்று முன்னர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய  எரிபொருள் தொழிற்சங்கம் அறிவிப்பு. Reviewed by Madawala News on 7/26/2017 08:13:00 PM Rating: 5