tg travels

வசீம் தாஜூதீன் கொலை வழக்கு செய்திகள் தேர்தல்கள் வரும் போது மட்டுமே. கண்டியில் இருந்து குனதிலக ராஜபக்ச.


-ஜே.எம்.ஹபீஸ்-

தேர்தல் பற்றிய பேச்சுக்கள் உருவாகும் போது வசீம் தாஜூதீன் போன்றவர்களது கொலை வழக்குகள் பற்றிய செய்திகளும் வெளிவருவது ஒரு தேர்தல் பிரசார யுக்தியாகி விட்டது என மத்திய மாகாண சபை அங்கத்தவர் குனதிலக ராஜபக்ச தெரிவித்தார்.(18.7.2017)

மத்திய மாகாண சபைத் தலைவர் எல்.டி. நிமலசிரி தலைமையில் பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபை கட்டிடத்தில் இடம் பெற்ற மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்தெரிவித்தாவது,


ஏதாவது தேர்தல் பற்றிய நிலைமைகள் உருவாகும் போது வசீம் தாஜூதின் போன்றவர்களது கொலை வழக்குகள் பற்றிய செய்திகள் வெளியாகும். பின்னர் அது மறைந்து விடும். இது ஒரு புதிய கலையாக மாறிவிட்டது.

நாட்டுக்காக உயிரைப் பணயம் வைத்து போரிட்டு எமது தாய் நாட்டைப் பாதுகாத்துத் தந்த முப்படை  வீரர்களது சேவையை கொச்சைப் படுத்தும் வகையில் இன்றைய அரசு பொய்குற்றச் சாட்டுக்களை முன்வைத்து அவர்களை சிறையில் தள்ளியுள்ளது. மனித உரிமையைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் எமது யுத்த வீரர்களைக் கைது செய்கிறது.


அதே நேரம் நிதி மோசடி பொலீஸ் விசாரணைப் பிரிவு ஒன்றை ஆரம்பித்து தற்போது அது மூடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களை விசாரணைக்கு உற்படுத்தியவுடன் அப்படலம் முடிந்து விட்டது. ஐ.தே.க.யைச் சேர்ந்த சுமார் 20 பேர் அளவில் தற்போது உவிசாரணைக்காக உள்ளனர். அவர்களைப் பாதுகாக்கவே எப்.சி.ஐ.டி. எனப்படும் நிதி மோசடி பொலீஸ் விசாரணைப் பிரிவை மூட உள்ளனர்.

அதேபோல் மத்திய வங்கி முறி விற்பனை தொடர்பாக ஆயிரக் கணக்கான கோடிகளை மோசடி செய்தவர்கள் சுதந்திரமாக உள்ளனர். ஐ.தே.க. ஆட்சியின் போது அன்றைய கிளர்ச்சியாளரான ரோகன விஜய வீரவைக் கைது செய்து கொலை செய்தார்கள். புலிப்பயங்கரவாதிகளை கைது செய்தது கொலை செய்தது போன்றன குற்றமாயின் ரோகன விஜயவீர போன்றவர்களைக் கைது செய்து கொலை செய்ததும் குற்றமாகக் கருதப்பட வேண்டும். அக்காலத்து இராணுவ வீரர்னளும் கைது செய்யப்பட வேண்டும்.

அப்படி நடக்க வில்லையே. அன்று ஒன்றும் இன்று ஒன்றுமாக இருக்க முடியாது.

இது போன்ற பல்வேறு விடயங்களை முன்வைத்து ஊடகங்கள் உதவிகொண்டு மத்திய மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பபற்ற சதி நடக்கிறது. மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட நாம் இடமளிக்க மாட்டோம். ஐக்கிய மக்கள் சுந்தந்திர முன்னணிக்கே மத்திய மாகாண மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்றார்.
வசீம் தாஜூதீன் கொலை வழக்கு செய்திகள் தேர்தல்கள் வரும் போது மட்டுமே. கண்டியில் இருந்து குனதிலக ராஜபக்ச. வசீம் தாஜூதீன் கொலை வழக்கு செய்திகள் தேர்தல்கள் வரும் போது மட்டுமே. கண்டியில் இருந்து குனதிலக ராஜபக்ச. Reviewed by Madawala News on 7/19/2017 10:00:00 AM Rating: 5