Kidny

Kidny

எது நடந்த போதிலும் இந்த ஆட்சியை ஒரு போதும் வீழ்த்த முடியாது. ஹலீம்


இன்று நாட்டில் நிர்வாகத்தை சீர்குலைப்பதற்காக பல்வேறு பணிப்பகிஷ்கரிப்புக்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே இவை  எது நடந்த போதிலும்  இந்த ஆட்சியை ஒரு போதும் வீழ்த்த முடியாது. அதே போன்று புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதில் ஒரு சில தடைகளை பௌத்த மஹா சங்கத்தினர் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும் எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திபால சிறிவேனவும் மற்றும் பிரதமர் ரனில் விக்கரமசிங்கவும் பௌத்த மத மஹா சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு பாதகமில்லாமல் அவர்களுடைய அங்கீகாரத்துடன் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கிய ஆணையை  நல்லாட்சி அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதில் மிகுந்த முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் புதிய அரசிலமைப்பு மாற்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் அடங்கியதாக இருக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், முஸ்லிம்கள் நிறுவனங்கள், புத்திஜீவிகள் விழிப்புடன் செயற்படுதல் வேண்டும்  என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.


400 மில்லியன் ரூபா செலவில் காபட் வீதியாக நிர்மாணிக்கப்பட்டு வரும் அக்குரணையிலிருந்து பூஜாப்பிட்டிக்கு செல்லும் ஏ. சீ, எஸ் ஹமீத் பிரதான  வீதியின்  வேலைத் திட்டத்தை நேரடியாக பார்வையிடுவதற்காகச் சென்ற முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் ஊடகங்களின் கேள்விகளுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்
ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதிகள் பல வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கினார்கள்.  அதில் மிக முக்கியமான வாக்குறுதியாக புதிய அரசியமைப்பை மாற்றி சிறுபான்மையின மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாகக் குறிப்பிட்டார்கள்.

இந்த அரசியலமைப்பை மாற்றுவதற்கான  ஓர் அரிய சந்தப்பமாக இந்த ஆட்சியே பொருத்தான ஆட்சியாக விளங்குகின்றது.  ஏனென்றால் இந்த ஆட்சியில் இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாகச் செயற்படுகின்ற தருணத்தில்தான் இந்த அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான சிறந்த தருணம் ஆகும். தேர்தலில் மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து குறிப்பாக சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு நல்லாட்சிக்கு அரசுக்கு உள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவும் பிரதமர் ரனில் விக்கிரசிங்கவும்   நெருக்கடியான நிலையிலும் இடைவிடாது இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்த புதிய அரசிலமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் இன்று உள்ள ஜனாதிபதி முறை உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் மாற்றியமைக்கப்பட்டு பலமிக்க ஜனநாயக நாடாக மாற்றியமைக்கப்படவுள்ளன. அதேபோன்று  இந்த நாட்டில் புரையோடிப்போய் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும் இந்த அரசியலமைப்பில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இருந்த போதிலும் பௌத்த மஹா சங்கத்தினர் பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வில்லை என்ற  பிழையான கூற்றை முன் வைக்கின்றனர். இதற்கு விசேட பிரதமர் ரனில் விக்கிரசிங்க கருத்துத் தெரிவிக்கையில் பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை கொடுத்தே இதனை அமைப்போம் என்று தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி கூட இதற்காக கரிசனை செலுத்தி  பௌத்த சங்கத்தினர்களுடன் கலந்தரையாடலை நடத்தி வருகின்றார்.

இந்த அரசியலமைப்புத் திட்டததின் மூ6ம் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுடைய அபிலாஷைகளைப் பெற்றுக் கொண்ட போது இந்த அரசிலமைப்புத் திட்டம் மாற்றியமைக்கப்படும். விசேடமாக தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கென தனித்துவமான பிரச்சினைகள் இருக்கின்றன. எமது நாட்டில் மாகாண சபை உருவாக்கம் கூட இந்த நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வாகவே வழங்கப்பட்டது.

13 வது அரசியலமைப்பு சட்டத்தில் இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளனர். விசேடமாக  மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் கூட்டப்பட வேண்டும் போன்ற பல அம்சங்கள் உள்ளன.  உத்தேச அரசியல் யாப்பு திருத்ததில் பொதுவாக முஸ்லிம்களுடைய அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும். அதற்கு வலுவானதும் அர்த்தம் நிறைந்த அழுத்தங்களை கட்சிபேதங்கள் மறந்து  அழுத்தங்கள் கொடுத்தல் வேண்டும் .இதற்காக எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்   என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மத்திய மாகாண பிரதான பொறியலாளர் அ;ஸ்ஹர், பள்ளிவாசல்கள் நிர்வாகிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி


எது நடந்த போதிலும் இந்த ஆட்சியை ஒரு போதும் வீழ்த்த முடியாது. ஹலீம் எது நடந்த போதிலும்  இந்த ஆட்சியை ஒரு போதும் வீழ்த்த முடியாது. ஹலீம் Reviewed by Madawala News on 7/12/2017 04:28:00 PM Rating: 5