Kidny

Kidny

இந்நாட்டிற்கு சிறந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களை பெற்றுக்கொடுத்த பூமி பேருவளையும் அக்குறணையுமே.


பேருவளையும் அக்குறணையும் இந்நாட்டிற்கு சிறந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களை பெற்றுக்கொடுத்த பூமிகளாகும்.

பேருவளையிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மாக்காரும் அக்குறணையிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான மர்ஹஜூம் ஏ.சி.எஸ். ஹமீதும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்திற்கு மாபெரும் சேவைகளைப் பெற்றுக் கொடுத்த முஸ்லிம் தலைவர்களாவர் என  தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்தார்.


பேருவளை மருதானை அப்ரார்பள் ளிவாசலில் சீனன் கோட்டையைச் சேர்ந்த இளம் இரத்தினக்கல் வர்த் தகர் அஹ்ஸர் ஸவாஹிரினால் 30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக் கப்பட்ட பெண்களுக்கான தொழுகை அறை கட்டடத்தை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற கூட் டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

 பள்ளிவாசல் ஜமாத் சபைத்தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.எம். ஹனபி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர்
மேலும் கூறியதாவது,

இந்நாட்டு முஸ்லிம்களின் ஆரம்ப குடி யேற்ற பூமியாக திகழும் பேருவளை சிறந்த அரசியல் தலைவர்களையும் கொடை வள்ளல்களையும் ஈன்றெ டுத்துள்ளது. பணம் படைத்தவர்கள் சமூகத்தின் எதிர்கால விமோசனம் கருதி பணத் தினை செலவு செய்ய வேண்டும். அந்த வகையில் இளம் வர்த்தகரான அஹ்ஸர் ஸவாஹிர் இப்பள்ளிவா சலின் முக்கிய குறைபாடாகவுள்ள
பெண் களு க் கான தொழுகை அறை, ஜனா ஸாக்களை கழுவி கப னிடுவதற்கான அறை, ஒய்வு அறை என்ப வற்றை உள்ளடக்கிய கட்டடத்தை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.

இது பாராட்டப்பட வேண்டிய ஒரு பணியாகும். நாட்டிலுள்ள பெரும் பாலான பள்ளிவாசல் களில் ஜனாஸாக்களை கழுவி கப னிடல், பெண்களுக்கான தனியான தொழுகை அறை வசதி குறைவா கவே உள்ளன. இக்குறைபாடுகளை நீக்க பணம் படைத்த தனவந்தர்கள் முயல வேண்டும்.
இவ்வாறான ஸதகதுல் ஜாரியா வான நல்ல காரியங்களை சமூகத் திற்குச் செய்து அதிக நன்மைகளைப்பெற்றுக்கொள்ள முன்வாருங்கள்.

இந்நாட்டிற்கு சிறந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களை பெற்றுக்கொடுத்த பூமி பேருவளையும் அக்குறணையுமே. இந்நாட்டிற்கு சிறந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களை பெற்றுக்கொடுத்த பூமி பேருவளையும் அக்குறணையுமே. Reviewed by Madawala News on 7/26/2017 10:55:00 AM Rating: 5