tg travels

மூன்றாவது போட்டியில் யானை தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டது.



இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. 

இப்போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்‌ஷ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

அடுத்துவரும் மூன்று போட்டிகளும்  சூதியவெவ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள நிலையில்,  குறித்த மைதானத்தின் பாதுகாப்பு குறித்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரியவெவ மைதானத்தை அண்டிய பகுதியில் யானைகள் சரணாலயம் காணப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த மைதானத்துக்குள் யானைகள் உள்நுழையும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனிடையே நேற்றைய தினம் கொழும்பிலிருந்து விஷேட குழுவொன்று அங்கு சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளதுடன் யானைகள் உற்பிரவேசிப்பதை தடுப்பதற்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

- hassim mohamed Naleem 
மூன்றாவது போட்டியில் யானை தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டது. மூன்றாவது போட்டியில் யானை தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டது. Reviewed by Madawala News on 7/04/2017 02:58:00 PM Rating: 5