Ad Space avaiable

கஹ்பத்துல்லாவை நோக்கி ஏவப்பட்டது ஏவுகணை... நடுவானில் முடியடித்தது சவூதி அரேபிய வான் படை.


-Razana Manaf-
நேற்று  வியாழக்கிழமை இரவு ஹூதி போராளிகளால் கஹ்பத்துல்லாவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை மக்காவிலிருந்து 69 கிலோமீற்றர் தூரத்தில் வழி மறித்து சவூதி பாதுகாப்பு படையினர் செயலிழப்பு செய்திருக்கிறார்கள்.

ஹஜ் பருவகாலம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவிருப்பதால் அதனை குழப்பும் முகமாக இந்த ஏவுகணை தாக்குதல் மக்காவை குறி வைத்து நடத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு தரப்புகள் செய்தி விஎளியிட்டிருக்கின்றன.

யேமனின் அல் ஹுடைடா துறைமுகம் ஹூதி போராளிகள் வசமே இன்னும் இருக்கின்றன இங்கிருந்தே ஹூதி போராளிகள் தாக்குதலை மேற்கொள்வதாக கூறப்படுகின்றது இந்த துறைமுகத்தை யேமன் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு சர்வதேச நாடுகள் தவறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது, சவூதி அரேபியாவின் எல்லைக்கு அண்மித்த பகுதியாக கருதப்படும் இந்த துறைமுகம் ஹூதி போராளிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் அது சவூதிக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றது, ஹூதி போராளிகளின் நாளுக்கு நாளான தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி மக்கா நகரம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் முயற்சியாகும் முதல் தாக்குதல் முயற்சி  கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 27ம் திகதி அன்று நடத்தப்பட்டிருந்தது, இந்த தாக்குதலையும் சவூதி அரேபிய வான் படையினர் வெற்றிகரமாக முறியடித்திருந்தனர்.

ஷீயா ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் தொடர்ச்சியான உதவிகளை செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது ஜனாதிபதி மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையும் செயற்பட்டு வரும் அதே வேளை அரசுப்படைகளுக்கு சவூதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டு படைகள் ஒத்துழைப்புகளை நல்கி வருகின்றது.

https://www.rt.com/news/397765-saudi-mecca-missile-intercept/
கஹ்பத்துல்லாவை நோக்கி ஏவப்பட்டது ஏவுகணை... நடுவானில் முடியடித்தது சவூதி அரேபிய வான் படை. கஹ்பத்துல்லாவை நோக்கி ஏவப்பட்டது ஏவுகணை... நடுவானில் முடியடித்தது சவூதி அரேபிய வான் படை. Reviewed by Madawala News on 7/28/2017 03:02:00 PM Rating: 5