Ad Space Available here

காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கு ஓட்டமாவடி நியாஸ் ஹாஜியின் தலைமையில் நிதி உதவி…


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ஓட்டமாவடி காவத்தமுனையில் இயங்கிவருகின்ற விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கு ஓட்டமாவடி
அக்கீல் டயர் வியாபார தள உரிமையாளரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக சேவைகளுக்காக தேசமான்ய விருதினை பெற்ற அல்ஹாஜ் நியாசின் தலைமையில் ஒரு இலட்சம் ரூபாய் நிதியானது நன்கொடையாக 27.07.2017 வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் நெய்னா முகம்மது மற்றும் புதிய பனிப்பாளரும், சட்டத்தரனியும், பதில் நீதவானுமான ஹபீப் மொஹம்மட் றிபான், எழுத்தாளர் அறபாத் மெளலவி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


குறித்த விசேட தேவையுடையோர் பாடசாலையானது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காவத்தமுனை பிரதேசத்தில் சுமார் பத்து வருட காலமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலைய ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம். சித்தீக் அவர்களின்  நிர்வாக செயற்பாட்டின் கீழ்  இயங்கி வந்தது. பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் அதிகம் பிறப்பால் (அங்கவீனம்) அல்லது மூலையின் நுண்ணறிவுதிறன் குறைபாடு உள்ளவர்களாகவும், உடல் ரீதியான பார்வை குறைபாடு, மற்றும் உள ரீதியாக சிந்திப்பதில் சிரமம், புரிந்து கொள்வதில் சிரமம், கேட்டல் குறைபாடு, பேச்சுக்குறைபாடு, அவயங்கள் குறைபாடு, மன வளர்ச்சி குன்றிய குறைபாடு, நடத்தைகளில் மாற்றம், மெல்லக் கற்றல், நீண்ட கால மருத்துவ கண்கானிப்புகளுடன் கூடிய தேவைகள் போன்ற குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர்.


அத்தோடு,,,ADHD அதிக செயற்பாடுகளை கொண்டவர்கள்,CEREBRAL PALSY மூளைகாய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள்.. AUTISM ஓட்டீசம், MENTALLY DEVELOPMENT DELAY மூளை விருத்தி குறைவு, DOWN SYNDROME மன்கொள்ளிய பாதிப்பு, EPILEPSY வலிப்பு நோயை கொண்டவர்கள், DEAF காது கேளாமை போன்றவைகளை குறிப்பிடலாம்.


ஆகவே இவ்வாறான பாரிய பிரச்சனைகளுடன் காணப்படும் விச்ஷேட தேவையுடைய கொண்ட குறித்த பாடசாலையினை 11.02.2017ம் திகதி அன்று கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டது. அதன போது புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெற்றது. தலைவராக சட்டத்தரணியும் பதில் நீதவானுமான ஹபீப் றிபான் தெரிவு செய்யப் பட்டதோடு, உப தலைவராக தாருஸ்ஸலாம் கலாபீட அதிபர் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனியும் செயலாளராக வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும்  எழுத்தாளருமான எஸ்.எச்.அரபாத் ஸஹ்வி பொருளாளராக எம்.பீ.எம். ஜஃபர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.


அத்தோடு குறித்த பாடசாலைக்கு உடனடி தேவையாக இருக்கின்ற மணவர்களுக்கான உபகர்ணங்கள், ஆசிரியர்களுக்கான சம்பள கொடுப்பனவுகள், பஸ்சுக்கான எரிபொருள் கொடுப்பணவு, மாணவர்களுக்கான நாளாந்த போசாக்குணவு, பாடசாலை காவலாளிகளுக்கான கொடுப்பணவும், பராமரிப்பு போன்றவைகளுக்காக புதிய நிருவாக பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. வலது குறைந்தோர் அல்லது விஷேட தேவையுடையோர் சமூகத்தால் அரவணைக்கப்பட்டு அன்பு காட்டப்பட வேண்டியவர்கள் என்பதனை மக்கள் தெள்வுடன் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என தேசமான்ய நியாஸ் ஹாஜி பாடசாலை நிருவாகத்துடனான கலந்துரையாடலின் பொழுது தெரிவித்தார்.
அந்த அடிப்படையிலேதான் குறித்த பாடசாலைக்கு எனது வேண்டுகோளின் பெயரில் தனது லண்டலில் இருக்கும் சகோதரியின் கணவர் வழங்கிய 50000 ரூபாய்களோடு தனது 50000 ரூபாய்களுடன் ஒரு இலட்ச்சம் ரூப்பாய்களை நன்கொடையாக வழங்கியுள்ளேன்.

இதனை ஊடகங்கள் மூலமாக சமூக மயப்படுத்த வேண்டும் என்ற தேவையில் நாங்கள் இதனை ஊடகமயப்படுத்தவில்லை. முக்கியமாக இவ்வாறான நன்கொடைகள் எதற்காக வழங்கப்படுகின்றது என்பதனையும், விஷேட தேவையுடையோர் சமூகத்தால் அரவணைக்கப்பட்டு அன்பு காட்டப்பட வேண்டியவர்கள் என்பதனை மக்கள் உணர்ந்து அவகளின் நலத்திற்காக நன் கொடைகளை வாரி வழங்க முன்வர வேண்டும் என்பதே எங்களுடைய நிலைபாடாகவும், வேண்டுகோளாகவும் இருக்கின்றது என மேலும் கலந்துறையாடலில் தெரிவித்தார்.

வீடியோ :-

காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கு ஓட்டமாவடி நியாஸ் ஹாஜியின் தலைமையில் நிதி உதவி… காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கு ஓட்டமாவடி நியாஸ் ஹாஜியின் தலைமையில் நிதி உதவி… Reviewed by Madawala News on 7/28/2017 08:04:00 PM Rating: 5