Ad Space avaiable

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரே இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரானார்.


 - Hassim Mohamed Naleem-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹஷான் திலகரட்ன, இந்தியாவுடன் இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது 50 வயதாகும் ஹஷான் திலகரட்ன, இலங்கையில் உள்ள வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான விஷேட துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுவதற்கு கடந்த வருடம் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். 

எனினும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட கிரஹம் போர்ட் அப்பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, ஹஷான் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்காகவும் அயராது அர்ப்பணித்து வந்தார்.  

அந்த வகையில், இம்மாதம் இடம்பெற்று முடிவடைந்த ஜிம்பாப்வே அணியுடனான  ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின்போதும் அவர் இலங்கை அணிக்காக துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரே இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரானார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரே இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரானார். Reviewed by Madawala News on 7/24/2017 10:39:00 PM Rating: 5