Ad Space avaiable

நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்து இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு.


பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில் 5.40 மணியளவில் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்து இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிபதியின் வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

10 வெற்றுத்தோட்டா வீதியில் காணப்படுகின்றது.

தற்போது காயமடைந்த இரு பொலிஸாரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்து இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு. நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்து இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு. Reviewed by Madawala News on 7/22/2017 06:31:00 PM Rating: 5