tg travels

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாப்பாளர் ஒருவர் உயிரிழந்தார்.


யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் நேற்று  இரவு 12.20 மணியளவில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார்.

யாழ்.நல்லூர் பின் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  அதில், சார்ஜென்ட் தர பொலிஸ் உத்தியோகத்தர் இரவு 12.20 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார்.

குறித்த மெய்ப்பாதுகாவலர் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் இருந்துள்ளதுடன், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் சந்தேக நபர் தீவகப் பகுதியில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாப்பாளர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாப்பாளர் ஒருவர் உயிரிழந்தார். Reviewed by Madawala News on 7/23/2017 09:58:00 AM Rating: 5