Ad Space avaiable

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க பௌத்த தேரர்கள் மட்டக்களப்புக்கு வருவதை வரவேற்கிறேன்.


மட்டக்களப்பில் மாற்று இனத்தவர்களால் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு  முடிவு கட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர்களைப் போன்று இன்னும் பல பௌத்த தேரர்கள் மட்டக்களப்புக்கு வர இருக்கின்றார்கள் என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் அமையவிருக்கும் ஆரம்ப வைத்தியபராமரிப்பு பிரிவு வைத்தியசாலைக் கட்டிடத்துக்குரிய அடிக்கல்செவ்வாய்க்கிழமை (25.07.2017) நாட்டப்பட்டது.

இதில் அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள் எந்தவித அபிவிருத்திகளையும்காணவில்லை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியிலுள்ள வைத்தியசாலைகளை புனரமைப்பு செய்யவேண்டும் என நான் கிழக்குமாகாண சபையில் பிரேரணைகளை முன்வைத்துள்ள போதும் தங்கள்,தங்களுடைய பகுதியிலுள்ள வைத்தியசாலைகளைத்தான் புனரமைப்புச் செய்கின்றார்கள்.

இதனையிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் பங்காளியாக இருப்பதையிட்டு வெட்கித்தலைகுனியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

கிழக்கு மாகாண சபையினால் முன்வைக்கப்படுகின்ற அபிவிருத்திப்பங்கீடுகள் விகிதாசார முறையில்முன்வைக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால்.

விகிதாரத்தை அமுல்படுத்த பௌத்த தேரர்கள் வரவேண்டியிருக்கும்.

மட்டக்களப்பில் தற்போது இருக்கும் அம்பிட்டிய சுமணரத்ன பௌத்த தேரர்போன்று தமிழர்களுக்காக குரல்கொடுத்து நியாயம் பெற்றுத் தரஇன்னும் பல பௌத்த தேரர்கள் மட்டக்களப்புக்கு வர இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு கல்குடா கல்விவலயத்திலுள்ள பாடசாலை ஒன்றின் காணியை அபகரிக்கின்றபோது அங்குசுற்றியுள்ள அரசியல்வாதிகள்,அவற்றைத் தடுத்து நிறுத்தியிருந்தால் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அங்குகளத்திற்குச் சென்று தமிழ் மக்களுக்குநீதி கேட்டிருக்க வேண்டிய அவசியம்வந்திருக்காது.-என்றார்.

-அப்துல் கையூம்-
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க பௌத்த தேரர்கள் மட்டக்களப்புக்கு வருவதை வரவேற்கிறேன். தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க பௌத்த தேரர்கள் மட்டக்களப்புக்கு வருவதை வரவேற்கிறேன். Reviewed by Madawala News on 7/26/2017 06:47:00 PM Rating: 5