tg travels

IS ஆதரவாளர் சென்னை மண்ணடியில் ராஜஸ்தான் போலீசாரால் கைது !


தமிழகத்தில் ஐ.எஸ்.ஆதரவாளர்கள் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டி கொடுப்பதாகவும் மத்திய உள்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சென்னையில் ஐ.எஸ். இயக்க தொடர்பாளர்களை பல்வேறு மாநில போலீசாரும் கண்காணித்து வருவதாக தமிழ் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


கடந்த பிப்ரவரி மாதம் மயிலாப்பூரில் முகமது இக்பால் என்பவர் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரது பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டதாகவும்,சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்த ஆரூண் ரஷீத் (36) என்பவர் சிக்கியதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த நபர் பர்மா பஜார் மற்றும் மாம்பலத்தில் சி.டி. கடை வைத்துள்ளதாகவும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளரான ஆரூண் ரஷீத் அந்த இயக்கத்துக்கு பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த குற்றச்சாட்டின் பேரிலேயே ராஜஸ்தான் போலீசார் மீண்டும் சென்னை வந்து நேற்று இரவு அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தான் ஆரூண் ரஷீத் சிக்கியுள்ளதாகவும்.இதனையடுத்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் வைத்து நேற்று இரவு அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் இன்று காலையில் ஆரூண் விமானம் மூலமாக ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


வடசென்னை பகுதியில் ஐ.எஸ். ஆதரவாளர் பிடி பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

IS ஆதரவாளர் சென்னை மண்ணடியில் ராஜஸ்தான் போலீசாரால் கைது ! IS ஆதரவாளர் சென்னை மண்ணடியில் ராஜஸ்தான் போலீசாரால் கைது ! Reviewed by Madawala News on 7/04/2017 01:14:00 PM Rating: 5