Ad Space avaiable

மொசூல் வீழ்ந்ததால், உயிரைக்காப்பாற்ற பெண் வேடமிட்டு தப்பிச்சென்ற தீவிரவாதிகள்..தாடி மீசையை அகற்ற மறந்ததால் சிக்கினர்.


ஈராக்கிய படையினர் 9 மாத போராட்டத்தையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மொசூல் நகரை மீளக் கைப்பற்றியுள்ள நிலையில், அந் நகரிலிருந்த தீவிரவாதிகளில் சிலர் பெண்கள் போன்று வேடமிட்டு அங்கி ருந்து தப்பிச் சென்ற வேளை படையினரிடம் வசமாக சிக்கியுள்ளனர்.

அவர்கள் பெண்கள் போன்று முகப் பூச்சு மற்றும் உதட்டுச் சாயம் என்பவற்றைப் பூசியும் ஆடை அணிந்தும் காணப்பட்ட போதும் தமது தாடி மீசையை அகற்றத் தவறியமை காரணமாகவே படையின ரிடம் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக் கப்படுகிறது.

இது தொடர்பான புகைப் படங்களை அந்நாட்டுப் படையினர் வெளியிட்டுள்ளனர். இத்தனை சிரமப்பட்டு வேடமிட்டு தப்பிச் செல்லும் முயற்சியில் அவர்கள் ஆண்கள் தான் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தும் தாடி மீசையை அவர்கள் அகற்றாது இருந்தமை வேடிக்கையான
ஒன்றாகவுள்ளதாக படையினர் கூறுகின் றனர்.

அவர்கள் அவசரம் காரணமாக தாடி மீசையை அகற்ற மறந்து விட்டிருந்தனரா அல்லது அவற்றை தமது அடையாளத்து வமாக கருதி அகற்ற அவர்கள் விரும்பா திருந்தனரா என்பது புரியவில்லை என அந்தப் படையினர் கூறுகின்றனர். மொசூல் நகரை படையினர் கைப்பற்றியதையடுத்து பெருந்தொகையான தீவிர வாதிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் நூற் றுக்கணக்கான தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மொசூல் வீழ்ந்ததால், உயிரைக்காப்பாற்ற பெண் வேடமிட்டு தப்பிச்சென்ற தீவிரவாதிகள்..தாடி மீசையை அகற்ற மறந்ததால் சிக்கினர். மொசூல் வீழ்ந்ததால், உயிரைக்காப்பாற்ற பெண் வேடமிட்டு தப்பிச்சென்ற தீவிரவாதிகள்..தாடி மீசையை அகற்ற மறந்ததால் சிக்கினர். Reviewed by Madawala News on 7/24/2017 11:20:00 AM Rating: 5