Kidny

Kidny

'‘iTech Studies’' ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான இலகு கல்வி அப்ளிகேஷன் . சம்மாந்துறை முஹம்மட் இர்ஷாட் உருவாக்கினார்.


இன்றைய நவீன கணினி உலகில் மாணவர்கள் தமது கணினிக் கல்வி அறிவை மேம்படுத்துவது
இன்றியமையாத தாகிவிட்டது.

பாடசாலை மாணவர்கள் முதற்கொண்டு தொழில்புரிபவர்கள் வரை அனைவராலும் இன்று கட்டாயமாகக் கற்க வேண்டிய ஒரு துறையாகத் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் அமைந்துள்ளது.

இதன் காரணமாக அனைவரும் இப் போட்டி மிகுந்த சூழலில் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தப் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

இத்தகையதொரு பிரச்சனையை நிவர்த்திக்கும் முகமாக பல்வேறுபட்ட அம்சங்களுடன் இலகுவில் கற்பதற்கென ‘‘iTech Studies’  எனும்  Android ’செயலி சம்மாந்துறையைச் சேர்ந்த M.T முஹம்மட் இர்ஷாட் எனும் மாணவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் விஷேட கற்கை நெறியினை மேற்கொண்டு வருகிறார்.

இந்த செயலியானது மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில் புரிபவர்கள், மற்றும் தொழில்நுட்பத் துறையோடு தொடர்புடைய அனைவருக்கும் மிகவும் பயன்தரும் வகையில் அமையப் பெற்றுள்ளது.

இதில் தரம் 10 மற்றும் தரம் 11 இற்குரிய பல்வேறு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கடந்த கால, மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள், பாடநூல்கள் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப பாடக் குறிப்புக்கள், தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய படங்கள் மற்றும் கருவிகள் என்பன கொண்டு காணப்படுகிறது.

அது மாத்திரமன்றி அனைவரும் தனது கணினி, தொழில்துட்ப அறிவைப் பரீட்சித்துப் பார்க்கும் முகமாக பல்வேறு கேள்விகளுடன் கூடிய Quiz பகுதியும் காணப்படுகிறது.

இதில் காணப்படும் கேள்விகளுக்கு விடையளிப்பதன் ஊடாகத் தனது கணினி அறிவை மேம்படுத்துவது மட்டுமன்றி பரீட்சித்துப் பார்க்கவும் முடிவது இதன் சிறப்பம்சமாகும். இச் செயலியானது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Android Phone வைத்திருக்கும் அனைவரும் கீழே காணப்படும் இச் செயலிக்கான LINK இனை கிளிக் செய்வதன் மூலம் உங்களது Phone இல் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

Download Link :    http://www.tinyurl.com/y6vj8s7s


M.T. Mohammed Irsad (BA Spcl. in ICT - SEUSL)
Sammanthurai
irsadseu@gmail.com


'‘iTech Studies’' ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான இலகு கல்வி அப்ளிகேஷன் . சம்மாந்துறை முஹம்மட் இர்ஷாட் உருவாக்கினார். '‘iTech Studies’' ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான இலகு கல்வி அப்ளிகேஷன் . சம்மாந்துறை முஹம்மட் இர்ஷாட் உருவாக்கினார். Reviewed by Madawala News on 7/19/2017 04:36:00 PM Rating: 5