Kidny

Kidny

குழந்தை பாக்கியமற்ற தம்பதிகள், செயற்கை முறையில் கருக்கட்டல் ( IUI,IVF ) மருத்துவம் இஸ்லாமிய பார்வையில்.


குழந்தை பாக்கியமற்ற தம்பதிகள்(Subfertility Couples) பல்வேறுபட்ட மருத்துவ பரிசோதனைகள்/சிகிச்சையின் பின்னாலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இறுதியில் விஷேட மகப்பேறு வைத்திய நிபுணர்களினால்(VOG) சிபாரிசக்கப்படும் சிகிச்சை வகையே IUI,IVF ஆகும்.

INTRA UTERINE INSEMINATION(IUI)
--------------------------------------
உடலுறவின் போது கருப்பையினுள் விந்தை செலுத்துவதற்கு பதிலாக விந்தானது வெளியே சேகரிக்கப்பட்டு விஷேட Catheter/Syringe மூலமாக கருப்பையில் நேரடியாக செலுத்தப்படும் முறையாகும்.இதன்போது பலோப்பியன் குழாயை(Fallopian Tube) அடையும் விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட்டுவதன் மூலம்  கருக்கட்டல் நிகழ்தகவை அதிகரித்தலாகும்.

இம்முறையானது பெரும்பாலும் ஆண்களில் சுக்கில திரவ அறிக்கையில்(Seminal Fluid Analysis) விந்தணுக்களில் பிரச்சனை உள்ள போது அவை விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல்-(Oligospermia),விந்தணுக்களின் இயக்கம்,உருவமைப்பில் பிரச்சனை-(Problems in Mobility&Morphology)#எவ்வித விந்தணுவும் இல்லாமை(Azoospermia)VOGயினால் மேற்படி சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது.இதை தவிர ஆண்களில்  -உடலுறவின் போது விந்து வெளியேறுவதிலுள்ள பிரச்சனைகள்(Ejaculation Dysfunction)
   -Physical Disability
   -Psychosexual Problems
பெண்களில்
    -Cervical Problems
    -Endometriosis
     -Female humeral antisperm   antibodies
மற்றும் குழந்தையின்மைக்கு அறியப்படாத காரணிகள்(Unexplained Infertility) எனபவற்றிற்கும் IUI முறை பயன்படுத்தப்படுகிறது.

இதன் போது சுக்கில திரவமானது(Seminal Fluid) வெளி ஊடகத்தில் எடுக்கப்பட்டு மையப்படுத்தப்பட்டு செறிவாக்கப்பட்ட (Centrifuge&Concentrated) விந்தானது மாதவிடாய் தொடங்கிய நாளிலிருந்து 12 தொடக்கம் 14வது நாள் இடையே கருப்பையினுள் நேரடியாக உற்செலுத்தப்படுகிறது.சூலகத்தினுல் முதிர்ச்சியான முட்டை(Mature Ovum)இருப்பதை உறுதிப்படுத்தப்பட்டு அல்லது இதற்குறிய முதிர்ச்சியான முட்டை உருவாகுவதற்குறிய(Ovulation Induction) மாத்திரைகள் பயன்படுத்தப்பட்ட பின்னரே உள் செலுத்தப்படும்.

விந்தின் கருக்கட்டப்படக்கூடிய உச்ச கட்ட காலம் 30-40 மணித்தியாலங்களாகும்.அதுபோல பெண்ணிண் சூலகத்திலிருந்து வெளியிடப்படும் முட்டையின்(Ovum) கருக்கட்டப்படக்கூடிய உச்ச கட்ட காலம் 24 மணித்தியாலங்களாகும்.

சுக்கில திரவ அறிக்கையில் அறவே விந்தணுக்கள் இல்லாதவர்கள் குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகின்ற போது ஆண்,பெண் இருவரது எழுத்து மூல சம்மதத்துடன்(written Consent) இன்னோருவரிமிருந்து விந்தானது பெறப்படும்(Sperm Donor).சில நாடுகளில் விந்துக்குறிய சேமிப்பு வங்கிகளும்(Sperm Bank) உண்டு.

INTRA VITRO FERTILIZATION-IVF(TEST TUBE BABY)
------------------------------------
கருப்பைக்கு வெளியே செயற்கையான ஊடகத்தில் விந்து,முட்டை என்பன சேகரிக்கப்பட்டு கருக்கட்டலை மேற்கொள்ளும் முறையாகும்.

இதன்போது விந்தானது உரியவரிடம் இருந்தோ அல்லது அவரிடம் விந்தனு இல்லாத போது இன்னோருவருடைய விந்தை ஆண்,பெண் இருவரின் அணுமதியுடன் சேகரிக்கப்படும்.இது போலவே முட்டையும் உரிய பெண்ணிடமிருந்து அல்லது பெண்ணுக்கு முட்டை இல்லாத போது இன்னோரு பெண்ணிண் சூலகத்திலிருந்து ஆண்,பெண் இருவரினது அணுமதியுடன் பெறப்படும்.

இம்முறையானது பின்வரும் நிலமைகளில் VOGயினால் பரிந்துரைக்கப்படும்.
   -குழந்தையின்மைக்கு அறியப்படாத காரணிகள்(Unexplained Infertility)
   -பலோப்பியன் குழாய்களில் அடைப்பு(Fallopian Tube Blocked)
   -IUI failure
   -Antisperm Antibodies in Cervix

இதன்போது செயற்கை ஊடகத்தில் கருக்கட்டப்பட்ட நுகமானது(Zygote) அடைகாக்கும் கருவியில்(Incubator)ஆறு நாற்கள் வைக்கப்பட்டு முளையமாக(embryo) கருப்பையினுல் இடமாற்றப்படும்.இவ்வாறு ஒருதடவையில் ஒன்றுக்கு மேற்பட்ட முளையங்கள் இடம்மாற்றப்படும்.இவ்வாறான முறையில் முதல் முதலில் 1978யில் உருவாக்கப்பட்ட குழந்தை (First Test Tube Baby)'Louise Brown'ஆவார்.
IVF,IUI முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்((Multiple Pregnancy) உருவாக சாத்தியக்கூறுகள் அதிகம்.

மேற்படி IUI,IVF முறைகள் VOGயினால் பரிந்துரைக்கப்படும் போது இது சம்பந்தமாக இது சம்பந்தமாக போதிய மருத்துவ,மார்க்க அறிவு இல்லாது உடனே இது ஹராம் மார்க்கத்தில் அணுமதி இல்லை என முடிவெடுத்து வைத்திய ஆலோசனையை புறக்கணிப்பவரகள் நம் சமூகத்தில் பலர் இருக்கிறார்கள்.இவ்வாறே இம்முறை மூலம் பெற்றுக்கொள்ளப்படும் குழந்தைகளை சந்தேக பார்வையுடன் பார்ப்பவர்களும் எம் சமூகத்தில் பலர் உள்ளனர்.

இஸ்லாமிய ஷரிஆ அடிப்படையில் உரிய கணவனின் விந்து,மனைவியின் முட்டை மூலமான கருக்கட்டல் முறையில் எல்லா மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி தெளிவான ஹலாலாகும்.

உரிய ஆண்,பெண்ணைத்தவிர மற்றையவர்களிடமிருந்து பெறப்பட்ட விந்து,முட்டை மூலமான கருக்கட்டல் முறை இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் தெளிவான ஹராமாகும்.இது ஏறத்தாழ விபச்சாரத்தின் மூலம் பெறப்பட்ட குழந்தைக்கு ஒத்ததாகும்.

நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician 
Doha-Qatar.
குழந்தை பாக்கியமற்ற தம்பதிகள், செயற்கை முறையில் கருக்கட்டல் ( IUI,IVF ) மருத்துவம் இஸ்லாமிய பார்வையில். குழந்தை பாக்கியமற்ற தம்பதிகள், செயற்கை முறையில் கருக்கட்டல் ( IUI,IVF )  மருத்துவம்  இஸ்லாமிய பார்வையில். Reviewed by Madawala News on 7/15/2017 11:46:00 AM Rating: 5