Kidny

Kidny

பிரபல அரசியல்வாதியின் மகன் உயிரிழந்ததன் காரணம் வெளியானது.


முன்னணி அரசியல்வாதியின் மகன் மாத்தறை சுற்றுலா ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகி உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கல்பத்தியின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி சுமித் அம்பேபிட்டியவினால் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

25 வயதான யசசிரு திஸர குமார கலபத்தி என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி மாலை விருந்து ஒன்றிற்காக ஹோட்டலுக்கு சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டலில் தனி அறையொன்றில் யசசிரு தங்கியிருந்தார். இந்த நிலையில் அவரை தேடிச் சென்ற போது குளியல் அறையினுள் விழுந்து கிடந்த நிலையில் நண்பர்களால் மீட்கப்பட்டார்.

பின்னர் குறித்த இளைஞரை கட்டிலின் மீது வைத்து விட்டு நண்பர்கள் நித்திரைக்கு சென்றுள்ளனர்.

அடுத்த நாள் நண்பர்களை அவரை எழுப்புவதற்கு முயற்சித்த போது யசசிரு உயிரிழந்திருந்த நிலையில் காணப்பட்டார் என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல அரசியல்வாதியின் மகன் உயிரிழந்ததன் காரணம் வெளியானது. பிரபல அரசியல்வாதியின் மகன் உயிரிழந்ததன் காரணம் வெளியானது. Reviewed by Madawala News on 7/16/2017 10:04:00 AM Rating: 5