Kidny

Kidny

ஜனாதிபதி மற்றும் மாநாயக்க தேரர்களுக்கும் இடையில் கண்டியில் இன்று முக்கிய சந்திப்பு.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மாநாயக்க தேரர்களுக்கும் இடையில் இன்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிற்பகலில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் உட்பட மேலும் சில பீடங்களின் மாநாயக்கதேரர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.

புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தமோ அவசியமில்லை என மாநாயக்க தேரர்கள் நேற்று முன்தினம் ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டனர்.

இதேவேளை, காணாமல்போனோர் தொடர்பான பணியகம் மற்றும் பலவந்தமாக காணமல் போதலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தை அங்கீகரிப்பதற்கான சட்டமூலம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த போதும், பின்னர் அது பிற்போடப்பட்டது. இந்த சட்டமூலம் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி, மாநாயக்க தேரர்களிடம் முறையிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பில் புதிய அரசிலமைப்பு மற்றும் பௌத்த மதம் மற்றும் மேற்குறித்த சட்டமூலம் என்பன தொடர்பாக மாநாயக்க தேரர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல்கள் இ;டம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் மாநாயக்க தேரர்களுக்கும் இடையில் கண்டியில் இன்று முக்கிய சந்திப்பு. ஜனாதிபதி மற்றும் மாநாயக்க தேரர்களுக்கும் இடையில் கண்டியில் இன்று முக்கிய சந்திப்பு. Reviewed by Madawala News on 7/06/2017 08:30:00 AM Rating: 5