Kidny

Kidny

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்பு.


பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கனிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

2016- 2017 ஆண்டு பல்கலைகழகத்திற்கு தெரிவான பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கும் புலமை பரிசில் வழங்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

வேலைவாய்ப்புகள் வழங்குவது தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் கடமைபுரியும் பெற்றோர்களின் சேவைக்காலம் கருத்தில்கொள்ளப்படும்.

இதனால் அவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.

இதுதொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சட்டப்பிரிவு புதிய சட்டவரைபொன்றை தயாரித்து, எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

´பல்கலைகழக தெரிவானது ஒருபக்கம் திறமையையும் மறுபக்கம் அதிஷ்டத்தையும் கொண்டது.

ஆனால் தற்போது பல்கலைகழகத்தில் 8,9 ஆண்டுகள் இருந்து சில மாணவர்கள் காலத்தை வீணாக்குகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நினைத்துப்பாருங்கள் தனது உரிமையை பெற்றுக்கொள்ளள பல்வேறு வழிகள் உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்பு. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்பு. Reviewed by Madawala News on 7/20/2017 10:44:00 AM Rating: 5