Kidny

Kidny

கட்டாரில் வசிக்கும் மார்க்க அறிஞர் யூசுப் அல் கர்ளாவியின் மகளும் மருமகனும் எகிப்தில் கைது செய்யப்பட்டனர்.


-Razana Manaf-

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு பட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மார்க்க அறிஞர் யூசுப் அல் கர்ளாவி அவர்களின் மகளும் அவரின் கணவரும் எகிப்து பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கைது சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது, கடலோர விடுதியில் ஒன்றில் அவர்கள் தங்கியிருந்த போதே பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்ட இருவரும் பதினைந்து நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்.

2013ம் ஆண்டு முர்சி அவர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பிறகு முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக எகிப்து அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது அன்று முதல் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டும் கொல்லப்பட்டுமுள்ளனர்.

யூசுப் அல் கர்ளாவி அவர்கள் மரண தண்டனை கைதியாக எகிப்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் அதே வேளை சவூதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கூட கர்ளாவி அவர்களை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.

கட்டாரில் வசிக்கும் மார்க்க அறிஞர் யூசுப் அல் கர்ளாவியின் மகளும் மருமகனும் எகிப்தில் கைது செய்யப்பட்டனர். கட்டாரில் வசிக்கும் மார்க்க அறிஞர் யூசுப் அல் கர்ளாவியின்  மகளும் மருமகனும் எகிப்தில் கைது செய்யப்பட்டனர். Reviewed by Madawala News on 7/03/2017 09:49:00 PM Rating: 5