Kidny

Kidny

கட்டுவன்வில மஸ்ஜிதுல் கைராத் பள்ளிவாயல் நிர்மாண பணிக்கு உதவிய உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகள்.

ட்டுவன்வில மஸ்ஜிதுல் கைராத் பள்ளிவாயலுக்கான மலசல கூடம் மற்றும் குளியல் அறை (பாத்ரூம்) வசதியினை அல்லாஹ்வின் பேர் உதவியால் கட்டுவன்வில நற்பணி மன்றம் செய்து முடித்துள்ளது.

அல் ஹம்துலில்லாஹ்.

இதற்காக சுமார் இரண்டு இலட்சத்திற்க்கும் மேலான நிதி  செலவிடப்பட்டுள்ளது. இதனை கத்தார்,குவைத்,மற்றும் சவூதி அரேபியா  போன்ற நாடுகளில் பணி புரியும் எமது கட்டுவன்வில  உறவுகள் மனமுவர்ந்து சந்தோசத்துடனும், ஆர்வத்துடனும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜஸாக்கல்லாஹு கைரன் வபாரக்கல்லாஹு பீக்கும்

அத்தோடு இதற்காக வெளிநாட்டிலும் உள்நாட்டிலும்  பலவிதமான முறையில் உதவி செய்த அத்துனை உறவுகளுக்கும் அல்லாஹ் அருளும் கிருபையும் பரக்கத்தும் ஈருலக பாக்கியங்களையும் தரவேண்டும். என்று கட்டுவன்வில நற்பணி மன்றம் பிரார்த்திக்கின்றது.

எதிர்காலத்திலும் எமது உறவுகள் எமது ஊரின் முன்னேற்றப் பாதையில் கைகோர்த்து செயல் படுவீர்கள் என நம்புகின்றோம்.

அத்தகைய பாக்கியத்தை அல்லாஹ் எம்அனைவருக்கும் வழங்குவானாக!!!

ஜஸாக்கல்லாஹு கைரன்

جزاكم الله خيرا 
تقبل الله منا ومنكم صالح الأعمال 
29/06/2017
மடவள News க்காக தகவல் வழங்கியவர் அஷ் - ஷைய்க் H. M. மூமின் முஹம்மட் ( மஜீதீ)





 


 
கட்டுவன்வில மஸ்ஜிதுல் கைராத் பள்ளிவாயல் நிர்மாண பணிக்கு உதவிய உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகள். கட்டுவன்வில மஸ்ஜிதுல் கைராத் பள்ளிவாயல் நிர்மாண பணிக்கு உதவிய உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகள். Reviewed by Madawala News on 7/01/2017 04:33:00 PM Rating: 5