tg travels

என்னை அதிபர் பதவியிலிருந்து அகற்றுவ தற்கு முயற்சி எடுத்தால் அமெரிக்காவின் இதயத்தின் மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்துவேன்.


வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னைப் பதவியிலிருந்து அகற்றுவ தற்கு முயற்சி எடுத்தால் அமெரிக்காவின் இதயத்தின் மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்தப்படும் என வட கொரியா எச்சரித்துள்ளதாக வடகொரிய அரசின் மத்திய செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் தெரிவித்திருக்கிறது.


வட கொரியா அணுவாயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்க ஜனாதிபதி கிம் ஜோங் உன்னைப் பதவியிலிருந்து அகற் றுவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐஏயின் பணிப்பாளர் மைக் பொம்பியோ கடந்த வாரம்
கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவே வட கொரியா இந்த எச்சரிக் கையை விடுத்துள்ளது.

சீ.ஐ.ஏ பணிப்பாளரின் கூற்றுக்கு பதிலளித்த வட கொரிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கொரிய ஜனநாயக மக்கள் குடி யரசின் கெளரவம் அச்சுறுத்தப்பட்டால் அவ்வாறு அச்சுறுத்தும் நாடுகளையும் அதில் நேரடியாகவோமறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ள அமைப்புக்களையும் வட கொரியா தாக்கி நிர்மூலமாக்க வேண்டும் என சட்டப்படி விதி உள்ளது என தெரிவித்துள்ளார். அமெரிக்கா எமது உன்னதமான தலை வரைப் பதவியிலிருந்து அகற்ற சிறியளவிலான முயற்சி எடுத்தாலும் எமது அணுவாயுதங்களைக் கொண்டு அமெ ரிக்காவின் இதயத்தில் ஈவிரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்துவோம் என அவர் மேலும் கூறியதாகவும் வட கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.

என்னை அதிபர் பதவியிலிருந்து அகற்றுவ தற்கு முயற்சி எடுத்தால் அமெரிக்காவின் இதயத்தின் மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்துவேன். என்னை அதிபர்  பதவியிலிருந்து அகற்றுவ தற்கு முயற்சி எடுத்தால் அமெரிக்காவின் இதயத்தின் மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்துவேன். Reviewed by Madawala News on 7/27/2017 03:02:00 PM Rating: 5