tg travels

இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக...


இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த அறுவை சிகிச்சையானது நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூளைச்சாவு அடைந்திருந்த 24 வயதான இளைஞன் ஒருவருடைய இருதயத்தினை அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இருதயம் சுமார் 12 வீதம் செயலிழந்திருந்த  34 வயதான பெண் ஒருவருக்கே இந்த அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களும் வேறு இரண்டு நோயாளர்களுக்கு மாற்றறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மூவரும் நலமாகவுள்ளதாக கண்டி வைத்தியசாலையின் பணிப்பாளரை மேற்கோள்காட்டி சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.



 

இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக... இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக... Reviewed by Madawala News on 7/09/2017 09:47:00 PM Rating: 5