tg travels

விஹாரையிலுள்ள தங்க புத்தர் சிலையையும் மாணிக் கற்க்ளையும் கொள்ளையடிக்க வந்தவர்கள் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலி.


மீகலாவ பொலிஸ் பிரிவிலுள்ள லஸ்சன கம பகுதி விஹாரயிலுள்ள தங்க புத்தர் சிலையையும் மாணிக் கற்க்ளையும் கொள்ளயடிப்ப தற்காக வந்த கொள்ளையர்கள் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி யுள்ளனர். இதில் ஒருவர் பலியானதாக மீகலாவ பொலிசார் தெரிவித்த னர்.

சம்பவத்தில் காயமடைந்த மற்று மொரு சந்தேக நபர் அநுராதபுரம் போதனா வைத்திய சாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது: விஹாரயிலுள்ள பொருட்களை கொள்ளையடிக்க இருவர் மோட்டார் சைக்கிளொன்றில் வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இத்தகவலினடிப்படையில் உடன் செயற்பட்ட பொலிசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையி டுவதற்கு முற்பட்ட வேளையில் சந்தேக நபர்கள் பொலிசார் மீது துப் பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.

பின்னர் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மோட்டர் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்களும் காயமடைந்து மீகலாவ வைத்திய
சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலை யில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காய மடைந்த மற்றவர் மேலதிக சிகிச் சைகளுக்காக வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ரீ.56 ரக துப்பாக் கியொன்றும் கைத்துப்பாக்கியும், கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட் டுள்ளது.


விஹாரையிலுள்ள தங்க புத்தர் சிலையையும் மாணிக் கற்க்ளையும் கொள்ளையடிக்க வந்தவர்கள் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலி. விஹாரையிலுள்ள தங்க புத்தர் சிலையையும் மாணிக் கற்க்ளையும் கொள்ளையடிக்க வந்தவர்கள் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலி. Reviewed by Madawala News on 7/26/2017 09:20:00 AM Rating: 5