Ad Space avaiable

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்த விஷேட சொற்பொழிவு.



இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத்தொடரில், எதிர்வரும் ஜூலை மாதத்துக்கான சொற்பொழிவு, 4ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணிக்கு ‘உள்ளங்களை வென்றிடுவோம்’ எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.

77,தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, கத்தார் இஸ்லாமிய விவகார அமைச்சின் பிரச்சாரகரும், பிரபல இஸ்லாமிய அழைப்பாளருமானஇ அஷ்ஷெய்க் ஸியால்தீன் மதனி  அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருவதோடு, இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகளுக்கு: 0766529128





இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்த விஷேட சொற்பொழிவு. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில்  மாதாந்த விஷேட சொற்பொழிவு. Reviewed by Madawala News on 7/03/2017 03:14:00 PM Rating: 5