tg travels

Life TALKS மேடையில் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும.



நாட்டில் உள்ள வித்தியாசமான ஆளுமைகளை அழைத்து அவர்களது வாழ்க்கை அனுபவங்களை இளம் சந்ததியினருடன் பகிர்ந்து கொள்ளும் Life TALKS நிகழ்ச்சியை OMSED அமைப்பு நடாத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆளுமைகள் தமது சுயசரிதையை இளைஞர்களோடு பகிரந்து கொள்வதோடு, அவர்களது வாழ்வில் கிடைத்த அனுபவங்கள், திருப்புப் புள்ளிகள் மற்றும் தமது வாழ்வில் கடைபிடித்து வரும் கொள்கைகள் போன்றன பற்றி பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் அடுத்த Life TALKS நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கலந்து கொள்ளவுள்ளார். அண்மைக்காலமாக தனது வித்தியாசமான சமூக நலன்களில் காட்டும் அக்கரை மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்ததுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நிகழ்ச்சி எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.
Life TALKS மேடையில் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும. Life TALKS மேடையில் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும. Reviewed by Madawala News on 7/25/2017 01:02:00 PM Rating: 5