tg travels

தேசிய மீலாத் குழு யாழ்ப்பாணம் செல்கிறது. அனைவரையும் சமூகம் தருமாறு அழைப்பு.


-பாறுக் ஷிஹான்-

தேசிய மீலாத் விழா நிகழ்ச்சிகளின் பல்வேறு அம்சங்களை வழிநடாத்தும் குழுவுடன் இணைந்து வேலை செய்வதற்கான  செயற்குழுக்கள்  நியமிக்கப்படவுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக இந்த குழுக்களுக்கான முன்மொழிவுகளை பெற்றுக் கொள்ளவும் யாழ்ப்பாணத்திலுள்ள நிலைமைகளை ஆராயவும் தேசிய மீலாத் குழுவின் முக்கிய பிரிவினர் எதிர்வரும் சனிக்கிழமை(22)   யாழ் வருகை தரவுள்ளனர்.

இந்தக் குழுவின் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் ஆலோசகர் முயீனுத்தீன் இ பணிப்பாளர் எம் ஆர். எம். மலிக்  உட்பட யாழ் தேசிய மீலாத் குழுவின் வழிநடாத்தும் குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.

முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும்  யாழ் முஸ்லிம்களின் சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை(22)  அன்று இரண்டு கட்டங்களாக நடைபெறும்

அதாவது  காலை 9.00 - 10.30 மணி வரை யாழ் மீலாது குழுவின் வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் உடனான சந்திப்பு யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் புதிய கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.அடுத்து  காலை 10.30 - பிற்பகல்12 மணி வரை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களுடனான சந்திப்பு யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் தொடர்ந்து இடம்பெறும். இதன் போது மேற்குறிப்பிட்ட செயற்குழுக்கள் தெரிவு  அங்கு  நடைபெறும்.

இந்த  மீலாத் விழா தொடர்பான  ஏற்பாடுகளை செய்வதற்கு எம். எஸ். அப்துல் ரஹீம்  எஸ். ஏ. சி. மஹ்ரூப் எஸ் ஏ. சி. முபீன் அஷ்ஷெய்க் பி.ஏ.எஸ். சுபியான் மௌலவி    ஜமால் மொஹிதீன்  ஆர்.கே. சுவர்க்ஹான்  ஐ. எஸ். எம் ரொக்கீஸ்  போன்றோர்  கூட்டத்துக்கான  ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள்.    

மேலும் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்   போன்றவற்றின் நம்பிக்கையாளர்களும்  இந்த கூட்டத்துக்கு சமூகமளிப்பதன் மூலம் மீலாத் அபிவிருத்தித் திட்டத்தின் பணிகள் எந்தளவுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும்  ஆய்வு செய்ய முடியும்.

எனவே இவர்கள் 10.30 மணியளவில் குறித்த   குழுவைச் சந்திக்கலாம் என்பதுடன்  இந்த கூட்டத்துக்கு அனைவரையும் சமூகம் தருமாறு யாழ் தேசிய மீலாத் விழா குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
                       
 மேலும்  வடக்கில்  தேசிய மீலாத் விழாவின்  நிகழ்ச்சிகளை நடாத்த முஸ்லிம் கலாச்சார  அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம்     தேசிய மீலாத் நிகச்சிக்கான வழிநடாத்தும் குழுவினை ஏற்கனவே  தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மீலாத் குழு யாழ்ப்பாணம் செல்கிறது. அனைவரையும் சமூகம் தருமாறு அழைப்பு. தேசிய மீலாத் குழு யாழ்ப்பாணம் செல்கிறது. அனைவரையும் சமூகம் தருமாறு அழைப்பு. Reviewed by Madawala News on 7/18/2017 10:00:00 PM Rating: 5