tg travels

(Video) தென் அதிவேக நெடுஞ்சாலையில் நடனமாடிக் கொண்டே காரைச் செலுத்தியவருக்கு தண்டம்.


தென் அதிவேக நெடுஞ்சாலையில், தன்னுடைய காரின் சுக்கானைப் பிடிக்காமல், நடனமாடிக் கொண்டே காரைச் செலுத்திய பிரபலமான நடிகையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அவ்வாறு கைதுசெய்யப்பட்ட நடிகையான மேனகா மதுவந்திக்கு, பண்டாரகம சுற்றுலா நீதிமன்ற நீதவான், 5,000 ரூபாய் தண்டம் விதித்துள்ளார்.

சுக்கானை பிடிக்காமல் சாரதி ஆசனத்தில் அமர்ந்தவாறு, கைகளை மேலே தூக்கிதூக்கி, நடனமாடியுள்ளார். அந்த நடனத்தின் வீடியோ, அவருடைய பேஸ்புக் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.   அதன் பிரதிகள், சமூக வலைத்தளங்களிலும், ஏனைய இணையத்தளங்களிலும் தரவேற்றப்பட்டுள்ளன. அந்த வீடியோவை பார்த்தவர்களில் இரண்டொருவர், ‘ஜனாதிபதியிடம் கூறுங்கள்’ தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்தே, அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னரே, அந்த நடிகைக்கு எதிராக, பொலிஸாரின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


(Video) தென் அதிவேக நெடுஞ்சாலையில் நடனமாடிக் கொண்டே காரைச் செலுத்தியவருக்கு தண்டம். (Video) தென் அதிவேக நெடுஞ்சாலையில் நடனமாடிக் கொண்டே காரைச் செலுத்தியவருக்கு தண்டம். Reviewed by Madawala News on 7/05/2017 06:53:00 AM Rating: 5