Ad Space avaiable

காணியை எழுதிக்கேட்டு தாயை அடித்தே கொன்ற மகன்.


மாத்தறையில் குடிபோதையில் வந்த மகன், தனது தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் கடந்த 3ம் திகதி மொரவக கொடிகாரகொட பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

சந்தேக நபரின் மூன்று பிள்ளைகள் தாக்குதலை தடுக்க முயற்சித்த போதும் அது தோல்வியடைந்துள்ளது.

மகனின் கொடூர தாக்குதலில் 83 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவர் தனது மகன் மற்றும் மகனின் மூன்று பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் தாயை விட்டு மகள் பிரிந்து சென்றிருந்தார்.

இந்த நபர் தினமும் குடித்து விட்டு காணி ஒன்றை தனக்கு எழுதி வைக்குமாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதேபோல் சம்பவதினத்தன்று விடியும் வரை தனது தாயை தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் அந்த பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணியை எழுதிக்கேட்டு தாயை அடித்தே கொன்ற மகன். காணியை எழுதிக்கேட்டு தாயை அடித்தே கொன்ற மகன். Reviewed by Madawala News on 7/06/2017 10:14:00 AM Rating: 5