tg travels

முஸ்லிம் மாணவிக்கு அநீதி.. கையில் கற்பூரம் கொழுத்தி சபையில் ஆக்ரோச உரை நிகழ்த்திய சகோதர இன அரசியல்வாதி.


(ஜே.எம்.ஹபீஸ்)

மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஆர். ராஜாராம் கையில் கற்பூரம் கொழுத்தி மாகாண சபைக் கூட்டத்தில் ஆக்ரோசமாக உரையாற்றினார்.(18.7.2017)

மத்திய மாகாண சபைத் தலைவர் எல்.டி. நிமலசிரி தலைமையில் பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபை கட்டிடத்தில் இடம் பெற்ற மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இவ்வாறு கையில் கற்பூரம் கொழுத்தி தமிழ் மொழிப்பாடசாலைகளுக்கு சம உரிமையோ சம வாயப்போ இல்லை எனக்கூறி  ஆக்ரோசமாக உரையாற்றினார்.

அவர் தமது உரையில் தெரிவித்தாவது-

ஹட்டன் கல்வி வலயத்தில் கப்ரியல் மகளிர் கல்லூரியில் தமிழ் சிங்கள பிரிவுகள் ஒரே நிர்வாகத்தில் கீழ் இயங்கு கின்றன.

இங்கு சிங்கள மொழிக்கு ஒரு நீதியும் தமிழ் மொழிக்கு ஒரு நீதியும் நடக்கிறது.

சிங்களப் பிரிவில் ஒரு கட்டிடம் திறந்து வைக்கப்பட்ட மறுகனமே மற்றொரு புதிய கட்டிடத்திற்கு அடிக்கள் நாட்டப்பட்டு விட்டது. அது நல்ல விடயம்.

ஆனால் அதே வளவில் உள்ள தமிழ் பிரிவில் பாம்புகளும், வெளவாலும்  காட்டில் வாழும் ஜீவராசிகளும் உள்ளே உள்ளன. பாம்புகள் கழற்றிப் போட்ட சட்டைகள்( மேல்  தோல்) அங்கு காணப்பட்டன. போதிய கட்டிட வசதிகள் இல்லை. வாசிக சாலையில் உண்ணி என்ற சிற்றுயிர் வாழ்வதால் மாணவர்கள் உள்ளே செல்ல முடியாதுள்ளது.


அதனை விட மாபெரும் அநீதி ஒன்று நடந்தது. மத்திய மாகாண மட்டப் போட்டியில் ஹட்டன் வலயத்தில் 14 பாடசாலைகளில் இருந்து மாணவ மாணவிகள் தெரிவாகினர். அவர்களில் 13 பாடசாலைகலைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்டனர். ஆனால் கெப்ரியல் மகளிர் கல்லூரியில் இருந்து தெரிவானவர் மட்டும் பாடசாலையால் தேசிய மட்டப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட வில்லை.

அதற்காக வந்த கடிதம் அலட்சியம் செய்யப்பட்டு குறிப்பிட்ட போட்டியாளரான மாணவிக்கு அது அறியப்படுத்தப்பட வில்லை.

அவ்வாறு போட்டிக்குத் தெரிவானவர் ஒரு முஸ்லிம் என்பதாலா இவ்வாறு புறக்கணிக்கப்பட்டார்?

அல்லது தமிழ் மொழி என்தால் இவ்வாறு வேறுபாடு காணப்பட்டதா? எந்த இனமானாலும் எந்த மொழியானாலும் கல்வியில் பாகுபாடு காட்ட முடியாது. அந்த மாணவியின் மனநிலை எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும். அவன் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் வேறு விடயம். ஆனால் போட்டிக்கு அனுப்பப் பட்டிருக்க வேண்டும். இவ்வாறான பாகுபாடுகள் எமது மாகாணப் பாடசாலைகளில் காட்டப்படுகின்றன என்றார்.


இதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா கூறியதாவது ஒரு பாடசாலையின் தேவை கருதியே நாம் கட்டிடங்களைக் கட்டுகிறோம்.

கப்ரியல் மகளிர் வித்தியாலயத்திற்கு அண்மையில் ஒரு பன்றிப் பண்ணை இருக்கிறது. அதிலுள்ள உண்ணிகளே (மெக்கோ) பாடசாலைக்குள் வந்து மாணவர்களைக் கடிக்கிறது. அப் பண்ணையை மூடு வதற்கு நடவடிக்கை எடுக்கும் படி பெற்றோர்களுக்குக் கூறினோம். அது நடக்கவில்லை.

அங்குள்ள மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும். அத்தேவையின் அடிப்படையிலே அங்கு கட்டிடம் ஒன்று அமைக்கப்படுகிறது.

இது தவிர வேறு அங்கு வேறுபாடுகள் கிடையாது என்றார்.  இதன் காரணமாக முற்றாக மூடப்பட்ட ஒரு கட்டிடம் அப்பாடசாலைக்குத் தேவைப் படுகிறது. அதனையே நாம் மேற்கொண்டோம் என்றார்.
முஸ்லிம் மாணவிக்கு அநீதி.. கையில் கற்பூரம் கொழுத்தி சபையில் ஆக்ரோச உரை நிகழ்த்திய சகோதர இன அரசியல்வாதி. முஸ்லிம் மாணவிக்கு அநீதி.. கையில் கற்பூரம் கொழுத்தி சபையில் ஆக்ரோச  உரை நிகழ்த்திய சகோதர இன அரசியல்வாதி. Reviewed by Madawala News on 7/19/2017 10:30:00 AM Rating: 5