Ad Space Available here

மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ள வேட்பார்களை எதிர் பாக்கும் நாபீர் பெளண்டேசன்..


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

எதிர்கால அரசியல் தலைவர்களாகவும், மக்களினுடைய பிரச்சனைகளை அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு உட்படுத்தி அதன் மூலம் மக்களினுடைய குறைகளை தீர்த்து வைப்பதற்காக சகல மக்கள் மத்தியிலும் செல்வாக்கினை பெற்று மக்களுடைய விருபத்திற்க்கு அமைவாக படித்த மற்றும் சமூக சிந்தனை உள்ளவர்களே எதிர்கால தேர்தல்களில் மக்களினால் களமிறக்கப்பட்ட வேண்டும் என சமூக சேவைகள் அமைப்பான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாப தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.

மேலும் வருகின்ற மகாண சபை மற்றும் உள்ளூராட்ச்சி மன்ற தேர்தல்களில் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் தனித்து களமிறங்கி தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ள நாபீர் பெளண்டேசன் இவ்வாறான மக்கள் மத்தியில் செல்வாக்கினையும், நன் மதிப்பினையும் பெற்றுள்ள, தேர்தலில் களமிறங்கும் தூய சிந்தனையுள்ளவர்களை வருகின்ற மாகாண சபை மற்றும் உள்ளூராட்ச்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கான விண்ணப்பபடிவங்களை சமர்பிக்குமாறு பகிரங்கமாக வேண்டி நிற்கின்றது.

அத்துடன் கிழக்கின் எதிர்கால அரசியலில்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ACMC,  சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்SLMC மற்றும் முஸ்லிம் கூட்டணி இம்முறை கூட்டணி அமைப்பதில் அதிக நெருக்குதல்களை எதிர் நோக்க கூடிய வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகின்றது.ஏற்கனவே இருக்கின்ற சில முஸ்லிம் உறுப்பினர்கள் மீது மக்கள் வைதுள்ள அதிருப்தி மற்றும் மூத்த முஸ்லிம் தலமைகள் பல போட்டியிட உள்ளமை மேலும் அதிகமான குழப்பங்களையும், கேள்விகளையுமே மக்கள் மத்தியில் எழுப்ப கூடிய அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அதுவே நிகழ்கால கிழக்கின் முஸ்லிம் அரசியலின் நிதர்சனாகவும் இருக்கலாம்.

அந்த அடிப்படையில் தேசியக் கட்சிகளை நம்பியிருக்கும் முஸ்லிம் தலமைகள் ஆசனப்பங்கீடு மற்றும் புதியவர்களை உள்வாங்குவதில் தோன்றியுள்ள சிக்கல்கள்,. முஸ்லிம் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ACMC) சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC),  என்பன ஒரே தேசியக் கட்சியில் கூட்டணி சேர்வது நடை முறையில் சாத்தியமற்ற வெளிப்படையான விடயமாக இருக்கின்றமை, தற்போது கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ACMC), நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)மற்றும் முஸ்லீம் கூட்டணி ஓரளவு முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கையினை செலுத்தலாம் என பேசப்படுகின்ற விடயங்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கான பிரதி நிதித்துவங்களை வெகுவாக குறைக்கும் என்பதில் அரசியல் சிந்தனையளர்களிடம் மாற்றுக்கருத்திருக்காது என்பதே உண்மை.
.
ஆகவே முஸ்லீம் தலமைகள் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் அதிகாரத்தைப் பலப்படுத்த வெளிப்படையான கலந்துரையாடல்களை  மேற்கொள்வதை போன்று முஸ்லிம் சமூகம் காலாகாலமாக ஏமாற்று அரசியல் வித்தைகளை மேற்கொண்டு வரும் அரசியல் கட்சிகளின் ஏமாற்று வார்த்தைகளில் இன்னும் அகப்பட்டுக்கொள்ளாமல் மக்கள் மத்தியில் நன்மதிப்பினை பெற்றுள்ள சமூக சிந்தனையாளர்களை புதியதொரு அரசியல் கலாச்சாரத்தினை நோக்கி நகர்த்துவது காலத்தின் கட்டாய தேவை என்பதோடு அவசியமான அவசரமான விடயமுமாகவும் பார்க்கப்பட வேண்டும்.

குறிப்பாக இந்த தேர்தலை வெறுமனே முஸ்லிம் முதலமைச்சர் என்ற இனவாதக் கண்டோட்டத்தில் முன்னெடுத்து சமூகத்தை பழிகொடுக்க துணை போகக்கூடாது என்பதை கவனத்தில் எடுபது ஒரு புறமிருக்க சமூக ஒற்றுமை, பேரம் பேசும் சக்தி, முஸ்லிம்களினுடைய பாதுகாப்பு,  இருப்புகளினுடைய உத்தரவாதம் மற்றும் சுரண்டல்கள் அற்ற அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் வெற்றியடையும் பொருட்டு மேற்கூறிய மக்கள் மத்தியில் செல்வாக்கினை பெற்றுள்ள, படித்த, சமூக சிந்தனையாளர்களை நாபீர் பெளண்டேசனின் எதிர் கால அரசியல் முன்னெடுப்புக்களோடு கைகோர்க்கும் முகமாகவும், தேர்தல்களில் களமிறங்குவதற்காகவும் விண்ணப்பங்களை கையளிக்குமாறு மேலும் தனது அறிக்கையில் தெரிவிக்கின்றது.
மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ள வேட்பார்களை எதிர் பாக்கும் நாபீர் பெளண்டேசன்.. மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ள வேட்பார்களை எதிர் பாக்கும் நாபீர் பெளண்டேசன்.. Reviewed by Madawala News on 7/08/2017 12:57:00 AM Rating: 5