Kidny

Kidny

புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு வெளியிட்ட மகாநாயக்க தேரர்களுக்கு ராஜித்த கொடுத்த பதிலடி.


புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது வௌியிடப்படுவதற்கே அன்றி, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கு அல்ல என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் 62 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையையே செயற்படுத்துவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

நேற்றையதினம் அஸ்கிரிய பீடத்தில் கூடிய மகாநாயக்கர்கள், புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என தீர்மானித்தனர். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என இதன்போது ஊடகவியலாளர்கள் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகள் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும் எனவும், இதன் இறுதி முடிவை பாராளுமன்றமே எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன தற்போதுள்ள அரசியலமைப்பை கொண்டு வந்த வேளை, எதிர்த்தவர்கள், இப்போது, அதனையே செயற்படுத்த வேண்டும் எனக் கூறுவது ஏன் என்று தெரியவில்லை எனவும் ராஜித்த இதன்போது கூறியுள்ளார்.

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர், முதலில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், பின்னர் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அமைச்சர், சட்டப்படி அந்த நடவடிக்கைகள் வருங்காலங்களில் முன்னெடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முதலாம் மற்றும் இரண்டாம் அரசியல் யாப்புகள் நிறைவேற்றப்பட்ட போது அல்லது மஹிந்த ராஜபக்ஷவால் 18வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, இதுபோன்ற ஜனநாயக செயல்முறை பின்பற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவர் சுயவிருப்புடன், தனது அதிகாரங்களை ஜனநாயகவாதியாக மக்களுடன் பகிர்ந்து கொள்ள சட்டம் மற்றும் நிலவும் அரசியலமைக்குப்பு மதிப்பளித்து செயற்படும் வேளை, அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் எனவும் ராஜித்த இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு வெளியிட்ட மகாநாயக்க தேரர்களுக்கு ராஜித்த கொடுத்த பதிலடி. புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு வெளியிட்ட மகாநாயக்க தேரர்களுக்கு ராஜித்த கொடுத்த பதிலடி. Reviewed by Madawala News on 7/05/2017 03:11:00 PM Rating: 5