Kidny

Kidny

ஞானசார தேரரை கைது செய்ய அவகாசம் இருந்தும் பொலிஸ், சிறை அதிகாரிகள் பயத்தில் உறைந்துபோயிருந்தனர். பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஒருவரின் சாட்சி இது.(எம்.எப்.எம்.பஸிர்)
கலகொட அத்தே ஞானசார தேரர் அன்று ஹோமா கம நீதிவான் நீதிமன்றில் நடந்துகொண்ட முறைமை யானது வன்முறையை மட்டுமே வெளிப்படுத்தியது.

அவரது நடவடிக்கைகள் கடும் பயத்தை ஏற்படுத்தின. ஞானசார தேரர் நீதிமன்றை அவமதிக்கும் வகையில் இவ்வாறு தொடர்ச்சியாக நடந்துகொண்ட போதும், அவரைக் கைது செய்வதற்கான போதுமான கால அவ காசம் இருந்த நிலையிலும், பொலிஸாரும் சிறைச் சாலை அதிகாரிகளும் பயத்தில் உறைந்து போய் கை கட்டி பார்த்திருந்தனர்.

இந்த அச்சுறுத்தல் காரணமாக வழக்குகளை ஒத்தி வைத்துவிட்டு நீதிவான் ஆசனத்தில் இருந்து செல்ல நீதிவான் முயன்ற போதே நான் தலை யிட்டு, வழக்குகளை ஒத்தி வைக்க வேண்டாம் எனவும், ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் மன்றை கோரினேன். இதன் போதே என்னை 'பேடித் தனமான அரச சட்டவாதி' என அவர் திட்டினார் என பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது, ஞானசார தேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன் றுக்குள் அத்து மீறியிருந்தார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரகீத் எக்னெலிகொடவின் மனை வியை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.


இதனைவிட அன்றைய தினம் பெரும் தொகையான பிக்குகளுடன் ஞானசார தேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் உள் நுழைந்து நீதிவான் ரங்க திஸாநாயக்கவை நோக்கி விரல் நீட்டி இராணுவத்தினரை பழி தீர்க்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியிருந்தார். இதனால் அன் றைய தினம் முழுதும் ஹோமாகம நீதிவான் நீதிமன்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து நீதி மன்றை அவமதித்தமை, அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் குறித்த வழக்கின் சாட்சியாளரான சந்தியா எக்னெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச் சாட்டுக்களின் கீழ் அவரை கைது செய்யுமாறு ஹோமாகம நீதிமன்றம் உத் தரவிட்டிருந்தது.


இந் நிலையில் ஞானசார தேரர், 2016 ஜனவரி 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் நீதிமன்றை அவமதித் தமை தொடர்பிலான வழக்கு அப்போதைய ஹோமா கம நீதிவானும் தற்போது கொழும்பு மேலதிக நீதிவா னுமாகிய ரங்க திஸாநாயக்கவினால் விசாரணைக்காக மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டது.

 இது தொடர்பிலான வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதி பதி எல்.டி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரும் மன்றில் பிரசன்னமாகியி ருந்தார்.

அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோ கர டி சில்வா ஆஜராகியிருந்ததுடன் சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹந்த அபேசூரியவின் கேள் விகளுக்கு பதிலளித்த வண்ணம் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் சாட்சியம் வழங்கினார்.

இதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஞானசார தேரரின் நடவடிக்கை தொடர்பில் நான் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்த நிலையில் சட்ட மா அதிபருக்கும் முறைப்பாடு அளித்திருந்தேன்.

உண் மையில் ஞானசார தேரர் குரலை உயர்த்தி நீதிவானுக்கு கட்டளை இடும் தொனியில் இது எந்த வகையிலும் சேர்த்துக்கொள்ள முடியாத கறுப்பு வெள்ளையர்களின் சட்டம். இதனூடாக இராணுவத்தினர் தண்டிக்கப்படு கின்றார்கள். இதனை நாம் பாராளுமன்றம் சென்றேனும் மாற்றுவோம் என கோஷமிட்டார். நீதிவான் ஞானசார தேரருக்கு விடயம் தொடர்பில் விளக்கமளித்த போதும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.


ஒரு தேரர் என்ற ரீதியில் மதிப்பளித்தே தான் பேசிக் கொண்டிருப்பதாக நீதிவான் கூறிய போதும் தொடர்ந்தும் ஞானசார தேரர் அச்சுறுத்தும் வண்ணம் பேசிக்கொண் டிருந்தார். அவர் நடந்துகொண்ட முறைமையானது றையை மட்டுமே வெளிப்படுத்தியது. அவரது நடவடிக் கைகள் கடும் பயத்தை ஏற்படுத்தின. ஞானசார தேரர் நீதிமன்றை அவமதிக்கும் வகையில் இவ்வாறு தொடர்ச் சியாக நடந்துகொண்ட போதும், அவரைக் கைது செய் வதற்கான போதுமான கால அவகாசம் இருந்த நிலை யிலும், பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் பயத்தில் உறைந்து போய் கை கட்டி பார்த்திருந்தனர்.


இந்த அச்சுறுத்தல் காரணமாக வழக்குகளை ஒத்தி வைத்துவிட்டு நீதிவான் ஆசனத்தில் இருந்து செல்ல முயன்ற போதே நான் தலையிட்டு, வழக்குகளை ஒத்தி வைக்க வேண்டாம் எனவும், ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் மன்றை கோரினேன். இதன் போதே என்னை 'பேடித்தனமான அரச சட்டவாதி' என அவர் திட்டினார் என சாட்சியம் வழங்கினார். இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஞானசார தேரரை கைது செய்ய அவகாசம் இருந்தும் பொலிஸ், சிறை அதிகாரிகள் பயத்தில் உறைந்துபோயிருந்தனர். பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஒருவரின் சாட்சி இது. ஞானசார தேரரை கைது செய்ய அவகாசம் இருந்தும் பொலிஸ், சிறை அதிகாரிகள் பயத்தில் உறைந்துபோயிருந்தனர். பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஒருவரின் சாட்சி இது. Reviewed by Madawala News on 7/27/2017 10:38:00 AM Rating: 5