Kidny

Kidny

விபத்தில் இறந்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம், கொலை என சந்தேகம் வந்ததால் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.


இயக்கச்சி பளையில் ஏ 9 வீதியில் கடந்த மாதம் இரவு வேளை இனம் காணப்படாத வாகனம் ஒன்று மோதி விபத்து மரணம் அடைந்ததாக சந்தேகிக்கப்பட்டு அடை யாளம் காணப்படாத நிலையில் கிளிநொச்சி திருநகர் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் பிற்பகல் கிளிநொச்சி நீதி மன்ற மாவட்ட மஜிஸ்திரேட் நீதிவானின் உத்த ரவின் பிரகாரம் மீளவும் தோண்டி எடுக்கப் பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவத்தில் பெண்ணின் சடலம் ஒரு மாத காலம் வரை அடையாளம் காணப்ப டாத நிலையில் கடந்த 14 இல் கிளிநொச்சி

மரண விசாரணை அதிகாரியால் பிரேதப்ரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டு சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது.

 குறித்த பெண்ணின் உறவினர்கள் கிளி நொச்சி நீதிமன்றில் முன்னிலையாகி அவர் அராலி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைரவன் செல்லம்மா என்றும் அவரது மர ணத்தில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் கொலை செய்ததன் பின்னர் சடலம் வீதியில் போடப்பட்டு விபத்து மரணமாக சந்தேகப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி யுள்ளனர்.

இதனையடுத்தே புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப் பட்டு மேலதிக உடல் கூற்று சோதனைக் காக நீதிவானின் உத்தரவின் பிரகாரம் கொழும்பு பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் இறந்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம், கொலை என சந்தேகம் வந்ததால் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. விபத்தில் இறந்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம், கொலை என சந்தேகம் வந்ததால் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. Reviewed by Madawala News on 7/24/2017 10:34:00 AM Rating: 5