tg travels

குளிக்கச் சென்றபோது தண்ணீர் குழியில் விழுந்த மனைவியை காப்பாற்றிய கணவன் பலி. புதுத் தம்பதிக்கு ஏற்பட்ட சோகம்.


பள்ளம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளம மதவாக்குளம் பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள கற் குழி ஒன்றில் நீராடுவதற்குச் சென்ற புதுத் தம்பதியினர் அக்குழியின் ஆழத்தில் வீழ்ந்ததில் மனைவி காப்பற்றப்பட்ட நிலையில் கணவர் சடலமாக மீட் கப்பட்டதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

ஆராச்சிக்கட்டு பிரதே சத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

ஆராச்சிக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பள்ளம பிரதேசத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை அப்பிரதேசத்தில் உள்ள கற் குழியில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

 புதுத் தம்பதியினர் நீராட   ஆயத்தமான போது சுமார் 30
ஆழமான குழியினுள் மனைவி விழ்ந்ததால் மனைவியைக் காப்பாற்றிய நிலையில் கணவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குளிக்கச் சென்றபோது தண்ணீர் குழியில் விழுந்த மனைவியை காப்பாற்றிய கணவன் பலி. புதுத் தம்பதிக்கு ஏற்பட்ட சோகம். குளிக்கச் சென்றபோது தண்ணீர் குழியில் விழுந்த மனைவியை காப்பாற்றிய கணவன் பலி. புதுத் தம்பதிக்கு ஏற்பட்ட சோகம். Reviewed by Madawala News on 7/24/2017 02:49:00 PM Rating: 5