Kidny

Kidny

பேரா­தனை கெட்­டம்பே பாலத்தின் மீது இடம்பெற்ற தங்கச் சங்­கி­லி அபகரிப்பு.. களத்தில் குதித்த போலீசாரிடம் உடனடியாக சிக்கிய திருடன்.


பேரா­தனை கெட்­டம்பே பாலத்தின்  மீது நடந்து  சென்று கொண்­டி­ருந்த  பாட­சாலை  ஆசி­ரியை ஒரு­வரின் தங்கச் சங்­கி­லியை பறித்துக் கொண்டு தப்பி­யோடிய சந்­தேக நபரை, பேரா­தனை பொலிஸார் 30 நிமி­டங்­களில் மடக்கிப் பிடித்­தனர்.

அம்­ப­க­முவ பிர­தேச  பாட­சாலை ஒன்றில் கடமை­யாற்றும் ஆசி­ரியை  ஒருவர்  பாட­சா­லை­விட்டு வீடு  செல்­வ­தற்­காக   கெட்­டம்பே  கண்­ணொ­ருவ பாலத்தின்  மேலாக சென்று கொண்­டி­ருந்­த­போது,  திடீ­ரென  எதிரில் வந்த நபர் ஒருவர் ஆசி­ரி­யையின்  கழுத்­தி­லி­ருந்த  சுமார் இரண்டு  பவுண் தங்கச் சங்­கி­லியை பறித்துக் கொண்டு தப்­பி­யோ­டி­யுள்ளான்.

இத­னை­ய­டுத்து கூக்­கு­ர­லிட்ட ஆசி­ரியை  உட­ன­டி­யாக கைய­டக்கத்  தொலை­பேசி மூலம் பேரா­தனை பொலி­ஸா­ருக்கு  தகவல்  வழங்­கி­யுள்ளார்.

உட­ன­டி­யாக  பொலிஸ்  நிலையப் பொறுப்­ப­தி­காரி கமல் ஆரி­ய­வங்­சவின்  ஆலோ­ச­னையின் பேரில் அங்கு  விரைந்த  பொலிஸார் ஆசி­ரி­யை­யிடம் தக­வல்­களைப் பெற்றுக் கொண்டு உட­ன­டி­யாக  தேடுதல்  நடத்­தினர்.

இதன்­போது சந்­தேக நபர் ஒரு ஒழுங்­கையின்  ஊடாக  ஓடிச் சென்று கொண்­டி­ருப்­பதை அவ­தா­னித்த  பொலிஸார் விரைந்து மடக்கிப் பிடித்­த­துடன், ஆசி­ரி­யை­யி­ட­மி­ருந்து பறித்துச் சென்ற சுமார் ஒரு இலட்சம்  ரூபா பெறு­ம­தி­யான  தங்கச் சங்­கி­லி­யையும் மீட்­டனர்.

பொலிஸார்  சந்­தேக நபரை நேற்று  மாலை  கண்டி நீதி­மன்­றத்தில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது  நீதிவான் சந்தேக நபரை 14 தினங்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

( படம்: அடையாளப்படம் )
பேரா­தனை கெட்­டம்பே பாலத்தின் மீது இடம்பெற்ற தங்கச் சங்­கி­லி அபகரிப்பு.. களத்தில் குதித்த போலீசாரிடம் உடனடியாக சிக்கிய திருடன். பேரா­தனை கெட்­டம்பே பாலத்தின்  மீது இடம்பெற்ற தங்கச் சங்­கி­லி அபகரிப்பு.. களத்தில் குதித்த போலீசாரிடம் உடனடியாக சிக்கிய திருடன். Reviewed by Madawala News on 7/16/2017 11:06:00 AM Rating: 5