Ad Space avaiable

பிக்குகள் வந்ததால் அதீத சக்தியை இழந்து விட்டோம்.. பூஜையில் விபரீதம். அம்பாறை பிரதேச பெண் பலியான சம்பவம்.


அதீத சக்தியின் மூலம் நோயை குணப்படுத்துவதற்காக மேற்கொள் ளப்பட்ட பூஜையின் போது பெண் ஒருவர் திடீர் சுகயினமடைந்தமையினால் பூஜை செய்த மாந்திரீகரின் ஆலோசனைக்கு அமைய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.


கிராந்துருகோட்டை நகரை அண் மித்த பிரதேசத்தில் அதீத சக்தியினால் நோயை குணப் படுத்துவதாக தெரிவித்து கடந்த 22 ஆம் திகதி பூஜை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவ் விடத்துக்கு ஏராளமானோர் வருகை
தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த மாந்திரீகர் ஒருவர் உள்ளிட்ட குழுவினரே இந்தப் பூஜையை மேற்கொண் டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அம்பாறை பன்னல்கம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான திருமணமான பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்டிருந்த நோயைக் குணப்ப டுத்திக் கொள்ள குறித்த பூஜையில் கலந்து கொள்ளவந்திருந்த போது தம்மால் அப்பெண்ணை குணப்படுத்த முடியாதெனக் கூறி அக்குழுவினர் அவரை வைத்தியசாலையில் அனும திக்குமாறு கூறியுள்ளனர்.


கிராந்துருகோட்டை பிரதேசத்தில் பூஜை நடத்தப்படும் விடயம் அறிந்து பிக்குமார் குழுவொன்று அவ்விடத் துக்கு சென்று என்ன நடக்கின்றது எனவும் உங்களது பூஜையினால் எத்தனை பேர் குணமடைந்துள்ளனர் என்றும் பூஜை நடத்திய குழுவினரிடம் வினவி யுள்ளனர்.

அதன்போது, தமது பூஜைக்கு பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் இடையூறு விளைவித்தமையினால் தம்மிடமிருந்த அதீத சக்தி பலமிழந்துவிட்டதாகவும் அதனால் நோயை குணப்படுத்த வேண்டிய சக்தியை தாம் இழந்துள்ள தாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பிக்குமாரின் இடை யூறினால் தனது அதீத சக்தி அற்றுபோ யுள்ளதாக மைக்ரோபோன் வழியாக பக்தர்களுக்கு அறிவித்துவிட்டு பூஜை நடத்திய மாந்திரீக குழுவினர் அப்பகு தியில் இருந்து புறப்பட்டுச் சென்றுள் ளதாக தெரியவந்துள்ளது.


இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரி ழந்த பெண்ணின் உடல் நேற்றுமுன் தினம் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டது.
அதேவேளை கிராந்து ருகோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

ரெ.கிறிஷ்ணகாந் : மெட்ரோ 

பிக்குகள் வந்ததால் அதீத சக்தியை இழந்து விட்டோம்.. பூஜையில் விபரீதம். அம்பாறை பிரதேச பெண் பலியான சம்பவம்.  பிக்குகள் வந்ததால் அதீத சக்தியை இழந்து விட்டோம்.. பூஜையில் விபரீதம்.  அம்பாறை பிரதேச பெண் பலியான சம்பவம். Reviewed by Madawala News on 7/25/2017 03:17:00 PM Rating: 5